Published : 08 Jun 2020 05:53 PM
Last Updated : 08 Jun 2020 05:53 PM
விருதுநகரில் திருமணம் முடிந்த சில மணிநேரங்களில் புதுமாப்பிள்ளைக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த முகமது ஷரிப் என்பவருக்கும், விருதுநகரையடுத்த ஆர்.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த நஜிமா பானு என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சியிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கரோனோ ஊரடங்கு உத்தரவினால் மணமகன் சென்னையில் இருந்ததால் திருமணம் நடைபெறாமல் இருந்தது.
தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் நிச்சயம் செய்த மணமகள் நஜிமாபானு வீட்டில் எளிய முறையில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து விருதுநகருக்கு வரும் வழியில் விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடியில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தனரின் ரத்த மாதிரியை எடுத்து கரோனோ பரிசோதனைக்கு விருதுநகர் மருத்துவக் குழுவினர் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நேற்று நிச்சயித்தபடி மணமகன் முகமது ஷரிப்பிற்கும், மணமகள் நஜிமா பானுவிற்கும் முகக்கவசம் அணிந்து ஒரு சில உறவினர் பங்கேற்று திருமணம் முடிந்துள்ளது.
பின்பு இதனையறிந்த அம்மாபட்டி ஆரம்ப சுகாதார குழுவினர் மணமகள் இல்லத்திற்கு சென்று புதுமாப்பிள்ளையிடம் அவருக்கு கரோனோ தொற்று இருப்பது பற்றி எடுத்துக் கூறி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து அப்பகுதி முழுவதும் ஊராட்சி நிர்வாகமும், சுகாதாரத் துறையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT