Published : 08 Jun 2020 07:02 AM
Last Updated : 08 Jun 2020 07:02 AM
தமிழ் வளர்ச்சிக்காக மத்திய அரசு செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை ஏற்படுத்தியது. இந்த நிறுவனம் 2008-ம் ஆண்டு மே முதல் செயல்படுகிறது.
இதன் இயக்குநர் பதவிக்கு சமீபத்தில் நேர்காணல் நடந்தது. ஆனால், இப்பதவிக்கு உதவி பேராசிரியர் ஒருவரைத் தேர்வு செய்ததாக புகார் எழுந்துள்ளது. தகுதியானவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக நேர் காணலில் பங்கேற்ற பேராசி ரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன முன்னாள் ஆட்சிக்குழு உறுப் பினரும், மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழ் பேராசிரியருமான சீனிவாசன் கூறியது:
செம்மொழி நிறுவன இயக்குநர் பதவிக்கு பேராசிரியர், நிர்வாக பொறுப்பு வகித்த பேராசி ரியர் அல்லது இணைப் பேரா சிரியர் ஆகியோர் தகுதியுடையவரை நிய மிக்க வேண்டும். ஆனால், காங்கயத்தைச் சேர்ந்த உதவி பேராசிரியர் சந்திரசேகரன் என்பவரை இயக்குநராகத் தேர்வு செய்துள்ளனர்.
இதில் விதிமீறல் நடந்திருக் கலாம் என சந்தேகிக்கிறோம். இப்பொறுப்புக்கு தகுதியான நபரைத் தேர்வு செய்ய முதல்வரும், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பேராசிரியர்கள் சிலர் கூறுகையில், செம்மொழி நிறுவன இயக்குநர் பதவிக்கு பல்கலை. பேராசிரியர், நிர்வாகத் திறமையுடைய நபரை தேர்வுசெய்ய வேண்டும். உதவிப் பேராசிரியரை தேர்வு செய்ததை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT