Published : 07 Jun 2020 07:27 AM
Last Updated : 07 Jun 2020 07:27 AM

நேத்ராவைப்போல் சமூகப் பணி: மாணவர்களுக்கு ஆளுநர் அறிவுரை

சென்னை

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மதுரையைச் சேர்ந்த முடிதிருத் தக உரிமையாளர் சி.மோகனின் மகள் நேத்ராவை ஏழைகளுக்கான நல்லெண்ணத் தூதராக ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சங்கம் (யுஎன்ஏடிஏபி) நியமித்துள்ளது. இது தமிழகம் பெருமைப்படும் தருணம். நேத்ராவின் தந்தை மோகனை ‘மன் கி பாத்‘ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பாராட்டியிருந்தார். தந்தை மற்றும் மகளின் மனிதநேய செயல்பாட்டுக்கு எனது இதயப் பூர்வமான பாராட்டுக்கள்.

தற்போது, நேத்ரா நியூயார்க் மற்றும் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மாநாடுகளில் பங்கேற்று தனது கருத்துகளை தெரிவிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது மிகவும் பாராட்டத்தகுந்ததாகும்.

பெருந்தொற்றுக் காலத்தில், நேத்ரா போல சமூகப் பணிகளை செய்ய மாணவர் சமுதாயம் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மோகனும், நேத்ராவும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின் றனர். இவர்களைப்போன்ற தன்னார்வலர்கள் தான் சமுதா யத்துக்கு தேவைப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x