Published : 05 Jun 2020 06:52 AM
Last Updated : 05 Jun 2020 06:52 AM

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தொடர்ந்து கவலைக்கிடம்

சென்னை

கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது.

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராகவும், சேப்பாக் கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ-வாகவும் இருப்பவர் ஜெ.அன்பழகன். ஊரடங்கு அமலில் இருப்பதால், பொதுமக் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந் தார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக ஏற்பாடுகளை செய்துவந்தார்.

இந்நிலையில், திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் 2 நாட்களாக தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று முன் தினம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குரோம்பேட்டை யில் உள்ள டாக்டர் ரேலா மருத் துவமனையில் அனுமதிக்கப்பட் டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து முதல்வர் பழனிசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேசியுள்ளார். ‘அன்பழகன் உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர் வாகத்திடம் பேசுங்கள். அரசின் சார்பில் என்ன உதவி வேண்டு மானாலும் உடனடியாக செய்யுங் கள்’ என முதல்வர் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மண்டல கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு, அன்பழகன் உடல்நிலை குறித்தும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், அன்பழகன் சிகிச்சை பெறும் மருத்துவமனை மருத்துவர்களிடமும், மருத்துவ மனை நிறுவனர் ஜெகத்ரட்சகன் எம்.பி.யிடமும் அமைச்சர் பேசி யுள்ளார்.

தீவிர சிகிச்சை

இதற்கிடையே, டாக்டர் ரேலா மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி நேற்று வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன், சென்னை குரோம் பேட்டையில் உள்ள டாக்டர் ரேலா நிறுவனத்தின் பிரத்யேக கோவிட்-19 மருத்துவமனையில் கடந்த 2-ம் தேதி அனுமதிக்கப் பட்டார். கடுமையான சுவாசக் கோளாறுகளுடன் அனுமதிக்கப் பட்டபோது அவருக்கு கரோனா தொற்று இருந்தது.

சுவாசக் கோளாறு காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருகிறார். அவர் தற்போது வெண்டிலேட்டர் மூலமே 80 சதவீத ஆக்ஸிஜனை பெறுகிறார். கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்ற மும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x