Published : 04 Jun 2020 06:56 AM
Last Updated : 04 Jun 2020 06:56 AM

நாடு முழுவதும் 2-வது கட்டமாக 100 சிறப்பு ரயில்களை இயக்க திட்டம் - தமிழகத்தில் மேலும் 4 ரயில்களுக்கு வாய்ப்பு

சென்னை

நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் 2-வது கட்டமாக நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதில், தமிழகத்தில்மேலும் 4 ரயில்களை இயக்கவாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள்தெரிவிக்கின்றனர்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடுமுழுவதும் விரைவு,பயணிகள், மின்சார ரயில்களின் சேவை ஜூன் 30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது, ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டுள்ளதால் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் முதல்கட்டமாக 215 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. இதில் பயணம் செய்யலட்சக்கணக்கான மக்கள்டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால், கூடுதலாக ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கரோனா பாதிப்பு இல்லாத இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சமூக இடைவெளியைக் கடைபிடிக்க நிலையங்களில் ஒரு மீட்டர் இடைவெளியில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற கோடுகள் வரைதல், பயணிகளை பரிசோதித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கிருமிநாசினி தெளித்து பெட்டிகள் தூய்மைப்படுத்தப்படுகின்றன.

இதற்கிடையே, 2-வது கட்டமாக 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம்முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும். இதையடுத்து, ரயில் பெட்டிகளை தயார் செய்தல், வழித்தடங்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் தொற்று அதிகரிப்பால், சிறப்பு ரயில்கள் இயக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. தமிழகஅரசு அனுமதித்தால், சென்னையைத் தவிர இதர பகுதிகளில் மேலும் 4 சிறப்பு ரயில்களை இயக்கவாய்ப்பு உள்ளது’’ என்றனர்.

உடனுக்குடன் இ-பாஸ்

மேலும் தமிழக அரசின் உத்தரவுப்படி, ரயில்களில் வெளிமாநிலம்அல்லது வேறு மண்டல பகுதிகளுக்குச் செல்ல இ-பாஸ் பெற வேண்டுமென தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி, இ-பாஸ் பெறாமல் பயணிகள் ரயில்களில் பயணம் செய்ய முடியாமல் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு சிறப்பு அலுவலர்களை நியமித்து திருச்சி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் உடனுக்குடன் இ-பாஸ் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x