தமிழகம்
மதுரை மீனாட்சியம்மன் கோயில் புதிய இணை ஆணையர் பொறுப்பேற்பு
மதுரை மீனாட்சியம்மன் கோயில் புதிய இணை ஆணையர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையராக இருந்தவர் நடராஜன். இவர், இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக க.செல்லத்துரை என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர், இதற்கு முன் சென்னை, திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் இணை ஆணையராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
