Published : 01 Jun 2020 06:47 PM
Last Updated : 01 Jun 2020 06:47 PM

கலைஞர்கள், கலைக்குழுக்களுக்கு நிதி உதவி: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் அறிவிப்பு

கலைஞர்கள் மற்றும் கலைக்குழுக்களுக்கு இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்க நிதியுதவி வழங்குவது தொடர்பாக இயல் இசை நாடக மன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

“தொன்மை சிறப்புமிக்க தமிழக கிராமியக் கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களையும், கலைக்குழுக்களையும் ஊக்குவிக்கும் வகையில், இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிட தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் ரூ.5000/- வீதம் 500 கலைஞர்களுக்கும், கலைக்குழு ஒவ்வொன்றுக்கும் ரூ.10,000/- வீதம் 100 கலைக்குழுக்களுக்கும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நிதியுதவி வழங்கப்படும்.

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் விவரம்:

1. தனிப்பட்ட கலைஞரின் வயது 31.03.2020 தேதியில் 16 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

2. கலைக்குழுக்கள் தங்களது கலை நிறுவனத்தைப் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

விண்ணப்பப் படிவங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்பும் கலைஞர்கள் / கலைக்குழுக்கள் சுயமுகவரியிட்ட உறையில் ரூ.10/-க்கான தபால் தலை ஒட்டி மன்றத்திற்கு அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.

உறுப்பினர்-செயலாளர்,

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்,

31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை,

சென்னை-600 028. தொ.பே. 044 – 2493 7471.

ஏற்கனவே 30.04.2020 வரை கால அவகாசம் அளிக்கப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தற்போது 30.06.2020 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே 30.06.2020 செவ்வாய்க்கிழமை மாலை 5.45 மணிக்குள் அல்லது அதற்கு முன்னரோ மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்களை நேரிலும் அளிக்கலாம்”.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x