Published : 30 May 2020 06:52 AM
Last Updated : 30 May 2020 06:52 AM

யார் யாரிடம் மனுக்களை வாங்கினோம் என நிரூபிக்க திமுக தயார்: கே.என்.நேரு

திருச்சி/ தஞ்சாவூர்/ புதுக்கோட்டை

திமுகவின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் மூலம் மக்களிடம் இருந்து பெறப்பட்ட 22,538 மனுக்களை திருச்சி மாவட்ட ஆட் சியர் சு.சிவராசுவிடம் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் எம்எல்ஏக்கள் சவுந்திரபாண்டி யன், மகேஷ் பொய்யாமொழி, ஸ்டாலின்குமார், மாவட்டச் செயலாளர்கள் தியாக ராஜன், வைரமணி ஆகியோர் நேற்று அளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களி டம் கே.என்.நேரு கூறியது: தலைமைச் செயலாளரிடம் திமுக எம்.பி.க்கள் அளித்த மனுக்கள் போலியானவை என்பதை அமைச்சர் காமராஜ் நிரூபிக்கத் தயார் என்றால், யார் யாரிடம் எந்தெந்த மனுக் களை வாங்கினோம் என்பதை நிரூபிக்க திமுகவும் தயாராக உள்ளது என்றார்.

தஞ்சாவூர் தொகுதி மக்க ளவை உறுப்பினரும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான எஸ்.எஸ். பழநிமாணிக்கம் கூறியபோது, “திமுகவினர் மூலம் வழங்கிய கோரிக்கை மனுக்களெல்லாம் போலியானது என்ற அமைச்சர் காமராஜின் குற்றச்சாட்டை பொய் என்பதை நிரூபிப்ப தற்காக அந்தந்த மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கியிருக்கிறோம்” என்றார்.

திமுகவின் ‘ஒன்றிணை வோம் வா’ திட்டம் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப் பட்ட 20,313 கோரிக்கை மனுக்களை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரியிடம் எம்எல்ஏக்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன், பெரி யண்ணன் அரசு, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் உள்ளிட்டோர் நேற்று அளித்தனர்.

இதேபோல, 4 ஆயிரம் பேரிடம் பெற்ற மனுக்களை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையிடம் மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x