Published : 29 May 2020 07:11 PM
Last Updated : 29 May 2020 07:11 PM
ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவரும் நாட்டுப்புற மற்றும் நாடகக் கலைஞர்களுக்கு நிவாரணம் கோரி தாரை தப்பட்டை அடித்தும், கரகாட்டம் ஆடிவந்தும் திண்டுக்கல் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாட்டுப்புற மற்றும் நாடக கலைஞர்கள் வசித்துவருகின்றனர். ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இன்றி இவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடிவருகின்றன.
மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கிராமப்புறங்களில் கோயில் திருவிழாக்கள் மூலம் வருவாய் ஈட்டிவந்த இவர்களுக்கு இந்த ஆண்டு முற்றிலும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நலவாரியத்தில் பதிவு செய்த கலைஞர்களுக்கும் இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை என்கின்றனர். நலிந்த கலைஞர்களுக்கு அரசு நிதி மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கவேண்டும்.
துக்கநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தப்பாட்ட கலைஞர்களுக்கு அனுமதியளிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு கரகாட்டம், தப்பாட்டத்துடன் நடனமாடி வந்த கலைஞர்கள் திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT