Published : 28 May 2020 05:16 PM
Last Updated : 28 May 2020 05:16 PM
கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்க கோரி பழநியில் விடலைத் தேங்காய் உடைக்கும் போராட்டம் இந்து ஆலயப்பாதுகாப்பு குழு சார்பில் நடைபெற்றது.
கரோனா ஊரடங்கிற்கு முன்னதாகவே பக்தர்கள் கோயிலுக்கு செல்வதை அரசு தடைசெய்தது. இந்நிலையில் 60 நாட்களுக்கு மேலானநிலையில் கோயில்கள் இதுவரை திறக்கப்படவில்லை.
இந்நிலையில் ஊரடங்கில் கடைகள், போக்குவரத்து உள்ளிட்ட பலவற்றிற்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டநிலையில் கோயில்களை திறக்க இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
இதை கண்டித்து இந்து ஆலயப்பாதுகாப்பு குழு சார்பில் நேற்று பழநி திருஆவின்குடி கோயில் முன்பு விடலைத்தேங்காய் உடைத்து போராட்டம் நடத்தினர்.
இந்து ஆலயபாதுகாப்பு குழு பழநி நிர்வாகி ஈஸ்வரபட்டாசுவாமிகள் தலைமை வகித்தார். பலர் கலந்துகொண்டு விடலை தேங்காய்களை உடைத்து கோயில்களை திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கோயில்களுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாதபோதிலும் பூஜைகள் தவறாமல் தொடர்ந்து நடந்துவருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT