Last Updated : 28 May, 2020 02:31 PM

 

Published : 28 May 2020 02:31 PM
Last Updated : 28 May 2020 02:31 PM

மிகப்பெரிய காற்றாலை இறகினைக் கையாண்டு தூத்துக்குடி வஉசி துறைமுகம் சாதனை

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 72.40 மீட்டர் நீளமுள்ள காற்றாலை இறகு ஏற்றப்பட்டுள்ள ‘எம்.வி.மரியா’ கப்பல்.

தூத்துக்குடி

தூத்துக்குடி வஉசி துறைமுகம் 72.40 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய காற்றாலை இறகை ஏற்றுமதி செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

சென்னை அருகேயுள்ள மாப்பேடு என்ற இடத்தில் இருந்து 72.40 மீட்டர் நீளம் கொண்ட காற்றாலை இறகு, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு பிரத்யேக லாரி மூலம் கொண்டுவரப்பட்டது.

பின்னர் துறைமுகத்தின் 3-வது கப்பல் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘எம்.வி.மரியா’ என்ற சரக்கு கப்பலில் ஏற்றப்பட்டது.

கப்பலில் உள்ள 3 ஹைட்ராலிக் பளுதூக்கி இயந்திரங்கள் மூலம், இந்த ராட்சத இறகு கப்பலில் ஏற்றப்பட்டது.

இந்த இறகு மற்றும் காற்றாலை உதிரி பாகங்களை திருவள்ளுரில் உள்ள நோர்டிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், ஜெர்மனியில் உள்ள நோர்டிக்ஸ் ஏனர்ஜி ஜிஎம்பிஎச் என்ற நிறுவனத்திற்காக பெல்ஜியத்தில் உள்ள ஆன்டேர்ப் துறைமுகத்துக்கு அனுப்பியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x