Published : 28 May 2020 06:45 AM
Last Updated : 28 May 2020 06:45 AM
வெட்டுக்கிளிகள் தமிழகத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வேளாண் துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
வெட்டுக்கிளிகள் படை யெடுப்பானது பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மேற்கு ராஜஸ்தான் பகுதி வரை மட்டுமே வரும். ஆனால், இந்த ஆண்டு ஜெய்ப்பூர், நாட்டின் மையப் பகுதியான மத்தியப் பிரதேசத் தின் பன்னா புலிகள் சரணாலயம் உள்ளிட்ட பகுதிகளில் காற் றின் திசை காரணமாக வந்துள் ளது.
கடந்த ஆண்டிலும்...
சராசரியாக 26 ஆண்டுகள் கழித்து கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தானில் நிகழ்ந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்த ஆண்டு பிப்ரவரி வரை தொடர்ந்தது. ராஜஸ்தானில் 6 லட்சத்து 70 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் பாதிப்படைந் ததால், ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் தற்போது காணப்படும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு, தக்காண பீடபூமியைத் தாண்டி இதுவரை வந்ததில்லை. எனவே, அவை தமிழகத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. இருப்பினும் வெட்டுக்கிளிகளின் நகர்வு குறித்து மத்திய அரசு மூலம் தொடர்ந்து கண்காணிக்கப் படுகிறது. ஒருவேளை வெட்டுக் கிளி தாக்குதல் ஏற்பட்டால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற் காக கீழ்க்கண்ட வழிமுறை களைப் பின்பற்றலாம்.
பயிர் பாதுகாப்பு முறைகள்
சுற்றுச்சூழலைப் பாதுகாக் கும் பயிர் பாதுகாப்பு மருந்தான வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தலாம். மாலத்தியான் மருந்தை தெளிப் பான்கள் மற்றும் பெரிய டிராக்டர் மற்றும் தீ அணைக்கும் இயந்திரங்கள் மூலம் பரந்த அளவில் தெளித்து கட்டுப்படுத்த முடியும்.
உயிரியல் கட்டுப்பாடு காரணி யான மெட்டாரைசியம் அனி சோபிலே என்ற எதிர் உயிர் பூஞ்சாணத்தை தெளித்தும் கட்டுப்படுத்தலாம். வெட்டுக் கிளிகளை சாப்பிடும் கோழி மற்றும் பறவைகளைக் கொண் டும் கட்டுப்படுத்த இயலும். அரசு அனுமதியுடன் பூச்சி மருந்தை ஒட்டுமொத்த வான்வெளி தெளிப்பு மூலமாகவும் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு வேளாண் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT