Published : 27 May 2020 07:54 PM
Last Updated : 27 May 2020 07:54 PM
கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் வட்டங்களில் நடைபெற்றுவரும் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளை தமிழ்நாடு நீர்வளப் பாதுகாப்பு மற்றும் நதிகள் சீரமைப்புத் தலைவர் சத்தியகோபால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:
“தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருவையாறு மற்றும் திருவிடைமருதூர் வட்டங்களில் நடைபெற்றுவரும் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளை தமிழ்நாடு நீர்வளப் பாதுகாப்பு மற்றும் நதிகள் சீரமைப்புத் தலைவர் சத்தியகோபால் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் இன்று(27.05.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திருவையாறு வட்டம், தூர்வாரும் திட்டபணிகளின் கீழ் ஈச்சங்குடி கிராமம் வைரவன்கோயில் வாய்க்கால் தூர்வாரும் பணி, இலுப்பக்கோரை கிராமத்தில் காவிரி வடிநில பாசனகட்டுமானங்களை புனரமைத்து சீரமைக்கும் திட்டம், உள்ளிக்கடை கரைப்பகுதி கிராமத்தில் காவிரி வடிநில பாசன கட்டுமானங்களை புனரமைத்து சீரமைக்கும் திட்டம்,
மேட்டுத்தெரு கிராமத்தில் காவிரி-அரசலாறு தலைப்பு காவிரி வடிநில பாசனகட்டுமானங்களை புனரமைத்து சீரமைக்கும் திட்டம், கும்பகோணம் வட்டம், ரெட்டிப்பாளையம் கிராமம், தண்டாளம் வாய்க்கால் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பாசன விவசாய சங்கம் மூலம் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி, கும்பகோணம் வட்டம், விசலூர் கிராமம், மாத்தூர் வாய்க்கால் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பாசன விவசாய சங்கம் மூலம் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி, கும்பகோணம் வட்டம், ஆத்திகுளம் மற்றும் செம்மங்குடி கிராமங்களுக்குட்பட்ட முடிகொண்டான் ஆறு ரூபாய் 1.64 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை மூலம் தூர்வாரும் பணி, திருவிடைமருதூர்.
வடுககுடி, மனகுன்னம், செருகடம்பு கிராமங்களுக்குட்பட்ட வடுககுடி, மனகுன்னம், மண்ணியார் செருகடம்பு வாய்க்கால்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பாசன விவசாய சங்கம் மூலம் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி ஆகிய பணிகளை தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் நதிகள் சீரமைப்பு தலைவர் மற்றும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் வருவதற்குள் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திடுமாறு பொதுப்பணித்துறை அலுவலர்களை தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் நதிகள் சீரமைப்பு தலைவர் மற்றும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.
மேலும், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் இருபுறமும் கரைகளை பலப்படுத்தி, சமன்படுத்திடுமாறு பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் நதிகள் சீரமைப்பு தலைவர் மற்றும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.
பின்னர் தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் நதிகள் சீரமைப்பு தலைவர் மற்றும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
தமிழக முதல்வர் உத்தரவின்படி, நடப்பாண்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1387 பணிகள் நடைபெற்று வருகிறது. டெல்டா மாவட்டங்களில் சுமார் 3450 கிமீ நீள அளவிலான ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூபாய் 35.38 கோடி மதிப்பீட்டில் 109 பணிகள் எடுக்கப்பட்டுள்ளது. தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூபாய் 22.5 கோடி மதிப்பீட்டில் 945 கிமீ நீள அளவிலான பணிகள் எடுக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர்.
அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகள் முழுவதும் சென்றடையும் வகையில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விவசாய பாசனத்திற்கு நீர் செல்லும் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு முதலில் தூர்வாரப்பட்டு வருகிறது”.
இவ்வாறு தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் நதிகள் சீரமைப்பு தலைவர் மற்றும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இவ்வாய்வின் போது, காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் ராஜன், பயிற்சி ஆட்சியர் அமித் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்”.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT