Published : 27 May 2020 05:43 PM
Last Updated : 27 May 2020 05:43 PM
கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடுத் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்போர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என்று கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது.
தேசிய கால்நடை இயக்கம் சார்பில் கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் 2300 கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இனை இயக்குநர் மரு.சுரேஷ் கிறிஸ்டோபர் கூறுகையில், ‘‘இத்திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழுள்ள கால்நடை வளர்போர்க்கு 70 சதவீதம் மானியமும் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள கால்நடை வளர்போர்க்கு 50 சதவீதம் மானியமும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் 2 1/2 வயது முதல் 8 வயது வரை உள்ள பசு மற்றும் எருமை மாடுகள் காப்பீடு செய்யலாம்.
அதிகபட்சமாக ரூ.35,000 மதிப்புள்ள கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய மானியம் வழங்கப்படுகிறது. ஓராண்டு காப்பீடு கட்டனமாக கால்நடையின் மதிப்பில் 2 சதவீதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரூபாய் 35,000க்கு மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான காப்பீடு கட்டணத்தை கால்நடை உரிமையாளர்களால் செலுத்தபடவேன்டும்.
ஒரு குடும்பத்திற்கு அதிக பட்சமாக 5 கால்நடைகள் இத்திட்டத்தில் காப்பீடு செய்யலாம். மேலும், விபரங்கள் தெரிந்து கொள்ள அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அனுகலாம், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT