Published : 27 May 2020 07:55 AM
Last Updated : 27 May 2020 07:55 AM

ஏப்.30-ல் ஓய்வுபெற்ற ஆசிரியருக்கும் வயது நீட்டிப்பு சலுகை கிடைக்குமா?- அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

சிவகங்கை மாவட்டம் அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் டி.ஜெயமங்கலம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

நான் 30.4.2020-ல் பணியிலி ருந்து ஓய்வு பெற வேண்டும். எனக்கு 31.5.2020 வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலை யில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59 வரை உயர்த்தி தமிழக அரசு 7.5.2020-ல் ஆணை பிறப்பித்தது.

இந்த அரசாணையால் 31.5.2020-ல் வழக்கமாக ஓய்வு பெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பயன்பெறுவர். என்னைப் போல் ஏப்ரல் 30-ல் ஓய்வு பெற்று பணி நீட்டிப்புப் பெற்றோருக்குப் பலனில்லை. இந்த அரசாணை ஆசிரியர்கள் மத்தியில் பாரபட்சம் காட்டுவதாக உள்ளது.

எனவே 31.5.2020-ல் ஓய்வு பெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தும் அரசாணையை ரத்து செய்து 30.4.2020-ல் ஓய்வு பெற்றோருக்கும் ஓய்வு வயது நீட்டிப்புச் சலுகை வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை என்னை (மே 31) பணியிலிருந்து விடுவிக்கத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் ஜவஹரும் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி நிஷாபானு முன் காணொலிக் காட்சி மூலம் நேற்று விசாரணைக்கு வந்தன. மனுக்கள் தொடர்பாக அரசிடம் விளக்கம் பெற்று நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை புதன்கிழமைக்கு (மே 27) நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x