Published : 26 May 2020 09:22 PM
Last Updated : 26 May 2020 09:22 PM
மதுரை மேலூர் அருகே சீருடையின்றி இருசக்கர வாகனத்தில் சென்றவர்களுக்கு நூதன தண்டனை வழங்கியதாக எழுந்த புகாரில் எஸ்.ஐ ஒருவரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி மணிவண்ணன் நடவடிக்கை எடுத்தார்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகிலுள்ள கீழவளவு காவல் நிலையத்தில் பணிபுரிந்தவர் சார்பு ஆய்வாளர் கமலமுத்து. இவர் கீழவளவு அருகிலுள்ள பூதமங்கலம் பகுதிக்கு இரு தினத்துக்கு முன் வழக்கு ஒன்றின் விசாரணைக்கென சீருடை அணியாமல் சென்றிருக்கிறார்.
அப்பகுதியில் ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் சென்ற 6 பேரை பிடித்து கமலமுத்து தோப்புக்கரணம் போடச் சொல்லி எச்சரித்து அனுப்பி இருக்கிறார். இது குறித்து தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு கிடைத்தது.
இதற்கிடையில் சீருடையின்றி, அதுவும் வேறு பணிக்கு சென்ற எஸ்ஐ, பைக்கில் சென்றவர்களுக்கு தண்டனை வழங்கியதாக எழுந்த புகாரால் எஸ்ஐ கமலமுத்துவை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து, எஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளார் என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT