Last Updated : 26 May, 2020 12:51 PM

 

Published : 26 May 2020 12:51 PM
Last Updated : 26 May 2020 12:51 PM

மதுக்கடைகளை திறக்கும் போது கோயில்கள் ஏன் மூடப்பட வேண்டும்? கோயில்களை புதுச்சேரி அரசு திறக்கக்கோரி தோப்புக்கரண போராட்டம்

புதுச்சேரி

மதுக்கடைகளை திறக்கும் அரசு புதுச்சேரியில் உள்ள இந்துக் கோவில்களை திறக்க வலியுறுத்தி 50 கோயில்களின் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடந்தது.

புதுச்சேரியில் ஊரடங்கு காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான மத வழிபாட்டு இடங்கள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் நேற்று முதல் அனைத்து மதுபான கடைகளும் திறக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரி இந்து முன்னணி சார்பில் புதுச்சேரி நகர மற்றும் கிராம பகுதிகளில் உள்ள 50 கோவில்களுக்கு முன்பு தலா 5 பேர் என உடனடியாக கோவில்களை திறக்க வலியுறுத்தி தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடத்தினர்..

இதுதொடர்பாக இந்து முன்னணி மாநில செயலர் சனில்குமார், பொதுச்செயலர் ரமேஷ் கூறுகையில், "கரோனா தோற்று சம்பந்தமாக ஊரடங்கு பிறப்பித்தது சுமார் 60 நாட்களுக்கும் மேலாக ஆலயங்கள் திறக்கப்படாமல் உள்ளது.

தற்பொழுது ஊரடங்கு தளர்த்தப் பட்ட காலங்களில் இன்னும் ஆலயங்கள் திறக்கவில்லை மதுபான ,கடையும் சாராயக் கடையும் தீறக்கும் பட்சத்தில் ஆலயங்களை திறப்பதில் அரசு வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோயில்களின் முன்பு தோப்புக்கரணம் போராட்டம் நடத்தினோம்" என்று குறிப்பிட்டனர்.

புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் துவங்கி நகரம் மற்றும் புறநகர் முழுவதும் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கோவில்களில் ஒரே நேரத்தில் தோப்புக்கரணம் போடும் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x