Published : 26 May 2020 07:23 AM
Last Updated : 26 May 2020 07:23 AM

ஆரோக்கியமான வாழ்வுக்கு.. 99 வயது பி.கே.வாரியர் சொல்லும் ரகசியம்

பி.கே.வாரியர்

கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையின் அறங்காவலரும், மூத்த ஆயுர்வேத மருத்து வருமான பி.கே.வாரியரின் 99-வது பிறந்தநாள் விழா, கோட்டக்கலில் உள்ள அவரது கைலாசமந்திரம் இல்லத்தில் பொது முடக்கத்தால் எளிமையாக நடந்தது.

கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை உலக பிரசித்தி பெற்றது. இந்த வைத்திய சாலையின் அறங்காவலர் பி.கே. வாரியார் இந்த வயதிலும் ஆயுர்வேத மருத்துவத் துறையில் தீவிரமாகச் செயல் பட்டு வருகிறார். கூடவே கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையின் நிர் வாகத்தையும் கவனித்து வருகிறார்.

பி.கே.வாரியர் வளர்ந்த கதை..

கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையை நிறுவிய பி.எஸ்.வாரியர் 1944-ல் காலமானார். அவருக்குப்பின் அவரது மருமகன் பி.எம் வாரியர் பொறுப்பேற்றார். 1953-ல் விமானவிபத்தில் அவரும் இறந்துவிட அவரது சகோதரர் பி.கே.வாரியர் அறங்காவலர் ஆனார். பன்னியம்பள்ளி கிருஷ்ணவாரியர் என்பதன் சுருக்கமே பி.கே.வாரியர். அவர் பொறுப்பேற்ற பின்னரே கோட்டக்கல் உலக அளவில் பிரசித்தி பெற்றது.

பாரம்பரிய மருத்துவத்தை உலக அரங்கில் கொண்டு சேர்த்ததற்காக பத்ம, பத்ம பூஷண் விருதுகளை பெற்றிருக்கிறார் பி.கே.வாரியர். அவர் கூறும்போது ‘ குட்டாஞ்சேரி வாசுதேவன் ஆசான்கிட்ட சிஸ்யனா இருந்தேன். அன்றைய நாளில் கேரளத்தில் பிரசித்திபெற்ற ஆயுர்வேத வைத்தியர்களில் அவரும் ஒருவர்.

இப்போ சொந்த ஆயுர்வேதக் கல்லூரி இருக்கு. டில்லி, கொச்சினிலும் மருத்துவமனை இருக்கு. வருசத்துக்கு 8 லட்சம் பேருக்கு வைத்தியம் அளிக்கிறோம். ஏழைகளுக்கு இலவச வைத்தியமும் அளிக் கிறோம் என்றவரிடம், உங்க ஆரோக்கிய ரகசியம் பத்தி சொல்லுங்களேன் என இடை மறித்தேன்.

நான் சுத்த சைவம். கூடவே சின்ன வயதில் இருந்தே யோகா பயிற்சியும் செய்து வருகிறேன். இவை இரண்டோடு எனது ஆயுர்வேத மருத்துவமும் துணைக்கு இருப்பதால், இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது.

இதையெல்லாம்விட முக்கிய மானது வயித்துக்கு எது தேவையோ, அதை மட்டும் கொடுக்க வேண்டும். ஆரோக்கி யமான இயற்கை உணவுகளே என்னை சுறுசுறுப்பாக வைத்தி ருக்கிறது.’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x