Published : 26 May 2020 07:05 AM
Last Updated : 26 May 2020 07:05 AM
கோவைகரோனா வைரஸ் தாக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கருத்தில் கொண்டு, கோவை தாமரை வேர்ல்டு ஸ்கூலில் முதல் பருவக் கல்விக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கோவை குட்டிகவுண்டன்பதியில் அமைந்துள்ள தாமரை வேர்ல்டு ஸ்கூல், பின்லாந்து கல்வி முறை மற்றும் சிபிஎஸ்இ கல்வி முறையை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இங்கு ப்ரீ கேஜி முதல் 7-ம் வகுப்பு வரை சர்வதேச தரத்தில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
ஊரடங்கு உத்தரவால் கிராமப்புற ஏழை, நடுத்தர மக்களின் நெருக்கடியை உணர்ந்து, பெற்றோரின் நிதிச் சுமையை குறைக்கும் வகையில் தாமரை வேர்ல்டு ஸ்கூலில் ஒரு பருவ கால கல்விக் கட்டணத்தை பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொள்கிறது.
எனவே, நடப்பு கல்வியாண்டில் மூன்று பருவக் கட்டணத்தில், இரண்டு பருவ கால கட்டணங்களை மட்டும் செலுத்தினால் போதும். இந்த சலுகை 2020-2021-ம் கல்வியாண்டுக்கு ப்ரீ கேஜி முதல் 7-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும்.
ஊரடங்கு நீக்கப்பட்டு, பள்ளிகள் திறந்திட அரசு உத்தரவு வரும் வரை ஆன்லைன் மூலம் கற்பிக்க, ஆசிரியர் குழு ஆயத்தமாக உள்ளது.
தற்போது மாணவர் சேர்க்கை ஆன்லைனில் நடைபெறுகிறது. கூடுதல் தகவல்களுக்கு பள்ளியின் மக்கள் தொடர்பு அலுவலரை 95008 22259, 96002 22868 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment