Published : 26 May 2020 06:52 AM
Last Updated : 26 May 2020 06:52 AM

ஊரடங்கு தளர்வால் 62 நாட்களுக்குப் பிறகு புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு- விலை அதிகரிப்பால் மதுப் பிரியர்கள் அதிருப்தி

புதுச்சேரி/ காரைக்கால்

புதுச்சேரியில் 62 நாட்களுக்கு பிறகு நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளதால் மதுப் பிரியர்கள் அதிருப்தி அடைந்துள் ளனர்.

ஊரடங்கால் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி அனைத்து மதுபான கடை களும் மூடப்பட்டன. மதுபான விற்பனையே மாநிலத்தின் முக்கிய வருவாய் என்பதால் கடைகளை திறக்க புதுச்சேரி அரசு முடிவெடுத்தது. நீண்ட பரிசீலனைக்குப் பின், ஆளுநர் ஒப்புதலுடன் நேற்று மது, சாராயம் மற்றும் கள்ளுக் கடைகள் திறக் கப்பட்டன.

காலை 7 மணிக்கே மதுப்பிரியர் கள் வரிசையில் நிற்க தொடங்கினர். சிலர் பை, செருப்பைப் போட்டு இடம் பிடித்தனர். காலை 9.30 மணியளவில் கலால் துறையினர் சீல் அகற்றினர். 10 மணியளவில் பூசணிக்காய் சுற்றி, கற்பூரம் காட்டி கடைக்காரர்கள் கடையை திறந்தனர். மதுப்பிரியர்கள் ஆர்வத் துடன் மது வகைகளை வாங்கிச் சென்றனர்.

கடைகளில் கிருமிநாசினி தெளிப்பு, முகக்கவசம் அணி வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது என கரோனா கால நடைமுறைகளை அனைத்து கடைகளிலும் காண முடிந்தது. ஒவ்வொரு மதுக்கடை முன்பும் திருத்தப்பட்ட விலைப்பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது.

ஊரடங்கின்போது கள்ளத் தனமாக மதுபானங்களை விற் பனை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட 102 மதுபானக் கடைகள் திறக்கப்படவில்லை. புதுச்சேரியில் 920 வகையான மதுபானங்கள் விற்பனையா கின்றன. இதில், 154 மது வகை கள் தமிழகம் மற்றும் புதுச் சேரியில் விற்பனை செய்யப்படுபவை. இவை அனைத்துக்கும், தமிழ கத்துக்கு இணையாக விலை உயர்த்தப்பட்டது.

மேலும், தமிழகத்தில் விற் பனை செய்யப்படாத மது வகை களுக்கு விற்பனை விலையில் இருந்து 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. சாராயத் துக்கு 20 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

கள்ளுக் கடைகளுக்கு கூடுதல் வரி இல்லை. புதுச்சேரிக்குள் தமிழக மதுப் பிரியர்கள் யாரும் வராமல் இருக்க எல்லைப் பகுதிகளில் போலீஸார் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

குறிப்பாக பாகூர் சோரியாங் குப்பம் ஆற்றில் ஒற்றையடிப் பாதை வழியாக யாரும் வரக் கூடாது என 10 அடி ஆழ பள்ளம் தோண்டி, போலீஸார் தடுப்பு அமைத்தனர். 62 நாட்களுக்கு பிறகு கடையை திறந்தது மகிழ்ச்சி. தமிழகத்துக்கு இணையாக விலை யை உயர்த்தியது கஷ்டமாக இருக் கிறது.

விலை அதிகமாக உள்ளதால் குறைந்த விலை மதுவைத்தான் வாங்கமுடிந்தது. மது விலையை அரசு குறைக்க வேண்டும் என்று மதுப்பிரியர்கள் தெரிவித்தனர்.

காலையில் கட்டுக்கடங்காத கூட்டம் கடைகளில் இருந்தது. விலை அதிகம் என்பதால், கூட்டம் குறைந்து மதியத்துக்குப் பின் கடைகள் வெறிச்சோடின.

இதேபோல, காரைக்காலிலும் நேற்று மதுக்கடைகள் திறக்கப் பட்டன.

கரோனா வரி சேர்க்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்கப்பட்ட தால் குறைவாகவே வாங்கியதாக மதுப்பிரியர்கள் தெரிவித்தனர். ஊரடங்கின்போது விதிமீறியதால் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட மதுக் கடைகள், சாராயக் கடைகளைத் தவிர மற்ற கடைகள் அனைத்தும் திறந் திருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x