Published : 12 Mar 2014 09:18 AM
Last Updated : 12 Mar 2014 09:18 AM
இடதுசாரி கட்சிகளுடன் உடன்பாடு ஏற்படாததற்கான காரணத்தை அதிமுக அறிவிக்கவில்லை. அதிமுகவின் நோக்கம் என்ன என்பது போகப்போகத் தெரியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இடதுசாரி கட்சிகளுடன் அதிமுக உடன்பாடு வைத்துக் கொள்ளாததற்கான உண்மையான காரணத்தை இன்னும் அந்தக் கட்சித் தலைமை அறிவிக்கவில்லை. இடதுசாரிகளுக்கு எத்தனை தொகுதி ஒதுக்கீடு செய்வது என்பது காரணமா அல்லது வேறு அரசியல் நோக்கம் காரணமா என்று தற்போது உறுதியாக கூற முடியாது என்றாலும் போகப் போகத் தெரியும்.
இடதுசாரிகளை புறக்கணித்துவிட்டு தேசிய அளவிலோ, மாநில அளவிலோ ஒரு சரியான மாற்றை உருவாக்க முடியாது. இடதுசாரிகள் இணைந்து போட்டியிடுவது மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. போட்டியிடும் தொகுதிகளும் வேட்பாளர்களின் பட்டியலும் ஓரிரு நாட்களில் வெளியிடப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT