

மும்பையில் இருந்து வந்து எட்டயபுரத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் தங்க வைக்கப்பட்டிருந்த 5 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் கோவில்பட்டி, எட்டயபுரம், வேம்பார் ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் பிரிவில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
மும்பையில் இருந்து கடந்த 20-ம் தேதி வந்து எட்டயபுரத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் தங்க வைக்கப்பட்டிருந்த கயத்தாறை சேர்ந்த 17, 42 வயது ஆண்கள், 15, 29 வயது பெண்களுக்கும், 21-ம் தேதி வந்த புதூரைச் சேர்ந்த 7 வயது சிறுவனுக்கும் என மொத்தம் 5 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.