Published : 22 May 2020 07:43 AM
Last Updated : 22 May 2020 07:43 AM
கரோனா நெருக்கடியில் இருந்து அச்சு ஊடகங்கள் மீள அவர்களது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறி யிருப்பதாவது:
கடந்த 2 மாதங்களாக நடைமுறையில் உள்ள கரோனா ஊரடங்கால் விளம்பர வருவாய் இன்றி அச்சு ஊடகங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வரு கின்றன.
இதனால் இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணிபுரியும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களது வாழ் வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் என்னைச் சந்தி த்தபோது அச்சு ஊடகங்கள் சந்திக்கும் சிக்கல்களைக் கூறினர். அவற்றில் இருந்து மீள அச்சு காகிதம், இறக்குமதி செய்யப்படும் பிற மூலப் பொருட்களுக்கான சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும், மத்திய, மாநில அரசுகள் நிலுவையில் வைத்துள்ள விளம்பரக் கட்டணத்தை உட னே வழங்க வேண்டும், அரசு விளம்பரங்களுக்கான கட் டணத்தை 100 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சு ஊடகங்கள் தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்ற இந்த கோரிக்கைகளை தாங்கள் உடனடியாக நிறைவேற்ற வேண் டும். இவ்வாறு ஸ்டாலின் கூறி யுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT