Published : 21 May 2020 07:14 AM
Last Updated : 21 May 2020 07:14 AM

மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்கப்பட உள்ளதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறுகளில் தூர்வாரும் பணிகள் தீவிரம்

தஞ்சாவூர்

டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், வாய்க்கால், வடிகால்களை தூர் வார தமிழக அரசு நடப்பாண்டு ரூ.67.24 கோடியை ஒதுக்கீடு செய் தது. இதையடுத்து, கடந்த 12-ம் தேதி டெண்டர் விடப்பட்டு, உடன டியாக பணிகள் தொடங்கின.

தற்போது தஞ்சாவூர் மாவட் டத்தில் ரூ.22.92 கோடியில் 165 பணிகள், திருவாரூர் மாவட் டத்தில் 22.56 கோடியில் 106 பணிகள், நாகை மாவட்டத்தில் 16.72 கோடியில் 80 பணிகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.1.74 கோடியில் 9 பணிகள், திருச்சி மாவட்டத்தில் ரூ.1.76 கோடியில் 20 பணிகள், அரியலூர் மாவட்டத்தில் ரூ.16 லட்சத்தில் ஒரு பணி, கரூர் மாவட்டத்தில் ரூ.1.38 கோடியில் 11 பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, கல்லணைக் கால் வாய் கோட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 442 கி.மீ தொலைவுக்கு 50 பணிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 89 கி.மீ தொலைவுக்கு 7 பணிகளும் நடைபெற்று வருகின்றன.

கல்லணைக் கால்வாய் ஆற்றின் முழுக் கொள்ளளவான 4,000 கன அடி தண்ணீர் செல்லும் வகையில் புதுப்பட்டினம், கண்டிதம்பட்டு பகுதிகளில் ஆறு தூர்வாரப்பட்டு, கரைகள் சீரமைக் கப்பட்டு வருகின்றன.

மேலும், குடிமராமத்துத் திட்டத் தின் கீழ் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங் களில் 337 பணிகள் ரூ.96.26 கோடி மதிப் பீட்டில் நடைபெற்று வரு கின்றன.

இதுகுறித்து கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் கூறியபோது, “தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 130 பொக்லைன்கள் தூர்வாரும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், 100 பொக்லைன்கள் பிற மாவட்டங்களிலிருந்து வரவ ழைக்கப்பட்டு வருகின்றன. ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் இப்பகுதி களுக்கு வருவதற்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படும்” என் றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x