Last Updated : 20 May, 2020 08:56 PM

1  

Published : 20 May 2020 08:56 PM
Last Updated : 20 May 2020 08:56 PM

ஆன்லைனில் மட்டுமே ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி கிராமப்புறp பயணிகளைப் புறக்கணிக்கும் செயல்: ரயில்வே தொழிற்சங்கங்கள் கண்டனம்

மதுரை

ஆன்லைனில் மட்டுமே ரயில் டிக்கெட்டு முன்பதிவு செய்யும் முறையால் இணையப் பயன்பாடு தெரியாதவர்கள் ரயிலில் பயணிக்க முடியாத சூழல் உருவாகும். இந்த நடவடிக்கையை டிஆர்இயூ, சிஐடியூ தொழிற்சங்கங்கள் கண்டித்துள்ளன.

கரோனா தடுப்புக்கான ஊரடங்கால் சரக்கு மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்கள் தவிர, பயணிகளுக்கான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன.

ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 1-ம் தேதிக்கு பிறகு பயணிகளுக்கான 200 ரயில்களை இந்தியா முழுவதும் 16 மண்டல வழித்தடங்களில் இயக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம், சமூக விலகல் போன்ற விதிமுறைகளைப் பின்பற்றியே இந்த ரயில்கள் இயக்கப் பட உள்ளன. இதில் பயணிக்க விரும்புவோர் டிக்கெட் கவுன்டர்கள் இன்றி ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என, ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இது கிராமப்புற மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆன்லைன் பயன்பாடு தெரியாதவர்கள் பயணிக்க முடியாத சூழல் உருவாகும். இந்த நடவடிக்கையை டிஆர்இயூ, சிஐடியூ தொழிற்சங்கங்கள் கண்டித்துள்ளன.

இது தொடர்பாக டிஆர்இயூ கோட்ட செயலர் சங்கரநாராயணன் கூறும்போது, ‘‘ ஜுன் 1 ம்தேதி முதல்இயக்கப்படும் 200 பயணிகள் ரயில்களை இயக்க போவதாக அறிவிக்கப்பட்டுளளது. எந்தெந்த வழித்தடத்தில் எவ்வளவு ரயில் என, தெளிவாக குறிப்பிட வில்லை. இதில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என, ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

ஆன்லைன் தெரியாதவர்களை குறிப்பாக கிராமப்புற மக்களைஇது புறக்கணிக்கும் செயல்.

இந்திய மக்கள்தொகை 130 கோடியில் 45 கோடியினர் மட்டுமே இணையதளத்தைபயன் படுத்தும் நிலை உள்ளது.

கிராமங்களில் இணையதளத்தைபயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவு. முக்கிய , சிறிய நகரங்களிலும் முன்பதிவுகவுன்டர்களை திறந்து அனைவருக்கும் முன்பதிவு பயன் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

முன்பதிவு அலுவலங்களில் சமூகஇடைவெளி, முக்ககவசம், கிருமி நாசினியால்சுத்தம் போன்ற முன்எச்சரிக்கை யை பின்பற்றி இயக்க வேண்டும், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x