Published : 20 Aug 2015 07:55 PM
Last Updated : 20 Aug 2015 07:55 PM

தமிழகம்: தலித்களுக்கு எதிரான கொலைக் குற்றங்கள் அதிகரிப்பு

2014-ம் ஆண்டில் தலித் மக்களுக்கு எதிரான கொலைக்குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன என்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பக தகவல்.

அதேநேரத்தில், தாழ்த்தப்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு எதிரான ஒட்டுமொத்த குற்ற விகிதம் குறைந்திருக்கிறது.

இந்திய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, வட மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் தலித் மக்களுக்கு எதிரான கொலைக்குற்றங்கள் எண்ணிக்கை மோசமாகத்தான் இருக்கிறது.

2014-ம் ஆண்டில் 72 தலித் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 56 கொலை வழக்குகளைக் கொண்ட பீகாரைக் காட்டிலும் இது அதிகம். 80 கொலை வழக்குகளைக் கொண்ட மத்தியப்பிரதேசத்துக்கு அடுத்ததாக தமிழகம் இருக்கிறது. இவை அனைத்தும் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 302-ன் கீழ் பதிவு செய்யப்பட்டவை.

தமிழ்நாட்டில் 2013-ம் ஆண்டில் 28 தலித்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். தாழ்த்தப்பட்ட பிரிவினர் 52 பேர் மீது கொலை முயற்சிகள் நடந்துள்ளன. பலதரப்பட்ட கும்பல்களின் தாக்குதல் மற்றும் மோதல் உள்ளிட்ட 43 சம்பவங்களால் 2014-ல் 72 கொலைகள் நடந்துள்ளன. இதே காரணங்களால் பீகாரில் 56 கொலைகளே நடந்துள்ளன.

2014-ல் தமிழ்நாட்டில் பலாத்கார பாதிப்புக்கு உள்ளான தலித் பெண்களின் எண்ணிக்கை 33. இது 2013-ன் 28 ஆக இருந்தது.

ஒட்டுமொத்தப் பார்வை:

பொதுவாகப் பார்த்தோமானால், 2014-ம் ஆண்டு ஓர் ஆறுதலான போக்காகவே இருக்கிறது. ஒட்டுமொத்த தலித் மக்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 1,845-ல் இருந்து 1,546 ஆகக் குறைந்திருக்கிறது. 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் தலித் மக்களின் எண்ணிக்கை 1.4 கோடியாக இருக்கிறது. இந்த தகவலே தேசிய குற்ற ஆவணக் காப்பக ஆய்வில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

'நேர்மையான அறிக்கை வேண்டும்'

தலித் மக்களின் கொலை எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு குறித்து கவலை தெரிவித்த, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூத்த தலைவர் டி.ரவிக்குமார், "தலித் மக்கள், நடந்த கொலை வழக்கைப் பதிவு செய்யவே கடுமையான சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.

தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையம், அண்மையில் நடத்திய பொது விசாரணையில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.

ஏற்கெனவே விவசாயிகள் தற்கொலை குறித்த தேசிய குற்றப்பதிவுத் துறை ஆய்வறிக்கையில் கொடுக்கப்பட்ட எண்ணிக்கை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இவை எல்லாவற்றுக்குமான தெளிவான நேர்மையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்" என்றார்.

தமிழில்:க.சே.ரமணி பிரபா தேவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x