Published : 19 May 2020 08:33 AM
Last Updated : 19 May 2020 08:33 AM
கரோனா ஊரடங்கு காரணமாகமின்கட்டணம் செலுத்துவதற்கான காலஅவகாசம் வரும் ஜூன் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் வீடுகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டணத்தை செலுத்துவதற்கான காலஅவகாசத்தை ஜூலை 31 வரை நீட்டிக்கக் கோரி வழக்கறிஞர் ராஜசேகரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவி்ந்த்பாண்டியன் ஆஜராகி, மின்கட்டணம் செலுத்துவதற்கான காலஅவகாசம் வரும் ஜூன் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதைபதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT