Published : 07 May 2014 11:25 AM
Last Updated : 07 May 2014 11:25 AM

சிறுமியைக் காணவில்லை

திருவேற்காடு பேருந்து நிலையத் தில் காணாமல்போன 5 வயது சிறுமியை பெற்றோர் தேடி வருகின்றனர்.

சென்னை திருவேற்காடு பராசக்தி நகர் தனம்மாள் தெருவை சேர்ந்தவர்கள் பிரபு - தனம்மாள் தம்பதி. இவர்களின் மகள் ஜீவிதா(6). வீட்டருகே உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கிறார். உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக பெற்றோருடன் கடந்த 5-ம் திருவேற்காடு பேருந்து நிலையத்துக்கு ஜீவிதாவை அழைத்து வந்தனர். இந்நிலையில் திடீரென ஜீவிதா காணாமல் போய்விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த சிறுமி குறித்த தகவல் தெரிந்தவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 044- 23452377 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x