Published : 17 May 2020 07:17 AM
Last Updated : 17 May 2020 07:17 AM

விஷம் கலக்கப்பட்டதா? - திருப்பரங்குன்றம் கண்மாயில் இறந்து மிதந்த மீன்கள்

நுரை பொங்கி காணப்படும் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய்.

மதுரை

மதுரை அருகே திருப்பரங்குன் றத்தில் 200 ஏக்கர் பரப்புள்ள தென்கால் கண்மாய் உள்ளது.

திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு இந்த கண்மாய் தண்ணீர்தான் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் ஆதாரமாக உள்ளது. நேற்று காலை கண்மாயில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன. தண் ணீரும் நுரை பொங்கி காணப் பட்டது. தகவல் அறிந்த பொதுப் பணித்துறை அதிகாரிகள் பரிசோதனைக்காக தண்ணீரை எடுத்துச் சென்றனர்.

திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த விஷ்வா என்பவர் கூறுகையில், கடந்த காலத்தில் யார் மீன் பிடிக்கும் குத்தகை உரிமத்தை பெறுவது என்ற போட்டியில் கண்மாயில் விஷம் கலந்து விடுவர்.

தற்போது கண்மாய் குத்தகைக்கு விடப்பட வில்லை. அப்படியிருந்தும் யார் இவ்வாறு செய்தனர் எனத் தெரியவில்லை. விவசாயிகள் கால்நடை களை இங்குதான் தண்ணீர் குடிக்க வைப்பர். தற்போது அவற் றின் நிலை என்னாகுமோ எனக் கவலையாக உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x