Published : 17 May 2020 07:06 AM
Last Updated : 17 May 2020 07:06 AM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.வரதராஜன் காலமானார்- ஸ்ரீரங்கத்தில் இன்று இறுதி நிகழ்ச்சி

கே.வரதராஜன்

சென்னை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான கே.வரத ராஜன்(73), கரூரில் உள்ள அவரது மகன் வீட்டில் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.

1946-ம் ஆண்டு ஸ்ரீரங்கத் தில் பிறந்த வரதராஜன், கட்டுமானத் துறை வரைவாளர் படிப்பை முடித்து, நெல்லை பாளை யங்கோட்டையில் பொதுப் பணித் துறையில் சேர்ந்தார். நெல்லை மாவட்டத்தில் பணிபுரிந்தபோது, செங்கொடி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். பின்னர் அரசுப் பணியைத் துறந்து விட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரானார்.

கட்சியின் திருச்சி வட்டக் குழு செயலாளராகவும், கட்சியின் ஒன்றுபட்ட திருச்சி மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றினார். பின்னர் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். இரண்டு முறை அரசியல் தலைமைக் குழுவுக்கு தேர்வாகி பணியாற்றினார்.

இவரது துணைவியார் சரோஜா அம்மாள் 6 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இவருக்கு பாஸ்கரன் என்ற மகனும், கவிதா என்ற மகளும் உள்ளனர். அவரது இறுதி நிகழ்ச்சி இன்று(ஞாயிறு) காலை 11 மணிக்கு திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

இதில் கட்சியின் தலை மைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித் துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “சிறந்த அமைப்பாளராக விளங்கிய கே.வரதராஜன் மாநிலம் முழுவதும் ஏராளமான தலைவர்களை உருவாக்கியவர். மிகவும் எளிமையாக அனைவருடனும் பழகக் கூடிய பாங்குபெற்றவர். அவருடைய மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், விவசாயிகள் இயக்கத்துக்கும் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். அவரது மறைவால் துயருற்றுள்ள குடும்பத்தாருக்கு ஆறுத லைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 3 நாட்களுக்கு கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்வதுடன், மாநிலம் முழுவதும் கட்சிக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட் டுள்ள அறிக்கையில், “மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் வகை யில் மாநிலம் முழுவதும் விவசாயிகள் சங்கக் கொடிகளை 3 நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x