Last Updated : 16 May, 2020 05:40 PM

 

Published : 16 May 2020 05:40 PM
Last Updated : 16 May 2020 05:40 PM

அரியலூர் மாவட்டத்திலிருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட 330 வெளிமாநிலத் தொழிலாளர்கள்

வெளிமாநிலத் தொழிலாளர்களை வாகனங்கள் மூலம் ரயில் நிலையத்துக்கு அனுப்பிவைக்கிறார் ஆட்சியர் த.ரத்னா.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் 330 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எந்தவொரு போக்குவரத்தும் செயல்படாத காரணத்தினால் வெளிமாநிலத்திலிருந்து அரியலூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 330 தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்ல விருப்பம் தெரிவித்தனர்.

இதையடுத்து, 330 நபர்களும் பிஹார் செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதனையடுத்து, ரூ.3 லட்சத்து 300 மதிப்பில் அனைவருக்கும் ரயில் டிக்கெட் பதிவு செய்யப்பட்டு, இன்று (மே 16) அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்காக மாவட்ட விளையாட்டு அரங்கிலிருந்து 14 வாகனங்கள் மூலம் 330 தொழிலாளர்களையும் மாவட்ட ஆட்சியர் த.ரத்னா, மதிய உணவுகள் வழங்கி வேன் மூலம் ரயில் நிலையத்துக்கு வழியனுப்பி வைத்தார்.

இதனையடுத்து அரியலூர் ரயில் நிலையம் சென்ற தொழிலாளர்கள், அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ரயில் மூலம் சென்னை வழியாக பிஹார் செல்கின்றனர்.

அனுப்பி வைப்பு நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்.பி. வீ.ஆர்.சீனிவாசன், கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி, வட்டாட்சியர் சந்திரசேகரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x