Published : 16 May 2020 07:42 AM
Last Updated : 16 May 2020 07:42 AM
கோடை காலத்துக்கு தேவையான 17 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உள்ளது, என தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்துள்ளார்.
திருச்செங்கோடு நகராட்சி கரட்டுப்பாளையம் 31-வது வார்டில் அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பங்கேற்ற அமைச்சர் பி. தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோடை காலத்துக்கு தேவையான மின் அளவான 17 ஆயிரம் மெகாவாட் தமிழக அரசின் வசம் உள்ளது. ஊரடங்கு காலத்தினால் தேவை 13 ஆயிரம் மெகாவாட்டாகத் தான் உள்ளது. இதனால், நெய்வேலியில் உற்பத்தி பாதித்தாலும், விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. மின்வாரியப் பணிகளுக்கு 3 சதவீதம் மாற்றுத்திறனாளிகளை தொடர்ந்து பணியமர்த்துவது வழக்கமாக உள்ளது தான். கேங்மேன் பணிக்கான தேர்வு நடந்துள்ளது. முடிவுகள் வெளியானவுடன் பணி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT