Published : 15 May 2020 07:25 AM
Last Updated : 15 May 2020 07:25 AM

அறிவுறுத்தலை அலட்சியம் செய்துவிட்டு முகக்கவசமின்றி வெளியே வரும் மக்கள்: கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவு

திருச்சி பாலக்கரை மேம்பாலம் சந்திப்பு அருகே முகக்கவசம் அணியாமல் நேற்று இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை பிடித்து அபராதம் விதிக்கும் காவல் துறையினர். படம்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி

திருச்சி மாநகரில் முகக்கவசம் அணியாமல் மக்கள் வெளியே வந்து செல்வது அதிகரித்துள் ளதால், விதிமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகளின் தீவிர களப் பணியால் திருச்சியில் நோய்த் தொற்று பரவல் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. எனினும், ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதிலிருந்து முகக் கவசம் அணிய வேண்டும் என்ற அறிவுறுத்தலை அலட்சியப் படுத்திவிட்டு திருச்சி மாநகரில் பொதுமக்கள் வெளியே வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகி றது.

இதுதொடர்பாக சமூக ஆர்வ லர்கள் கூறும்போது, “திருச்சி மாநகரில் கரோனாவால் உயிரி ழப்பு எதுவும் நேரிடவில்லை. ஆனாலும் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஊர் திரும்புவோரில் சிலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசும், மாவட்ட நிர்வாகமும் அறிவுறுத்தியும் மக்கள் அதை அலட்சியப்படுத்தும் விதமாக வெளியே வருகின்றனர். இவர்கள் மீது மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது, “பொதுமக்களுக்கு அவர்கள் மீதும், குடும்பத்தினர் மீதும், சமூகத்தின் மீதும், நாட்டின் மீதும் அக்கறை வேண்டும். நோய்த் தொற்று பரவாமல் தடுக்க ஒத்து ழைப்பு அளிக்காமல் விதிமீறி நடந்துகொள்வோர் மீது கடும் நடவ டிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றனர்.

இதுதொடர்பாக காவல் துறை வட்டாரங்களில் கேட்டபோது, “ஊரடங்கு விதிமீறல்கள் தொடர்பாக மாநகரில் 8,000 வழக்குகள் உட்பட மாவட்டத்தில் 15,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர் வுக்குப் பிறகு சாலைகளில் செல் லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஹெல்மெட் அணிந்துகொண்டு முகக்கவசம் அணியாமல் வருவோர் மீதும் வழக்கு பதிவு செய்து வருகி றோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x