Published : 15 May 2020 07:15 AM
Last Updated : 15 May 2020 07:15 AM

சென்னை பெருநகர காவல் ஆணையராக 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஏ.கே.விஸ்வநாதன்

சென்னை

சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஏ.கே.விஸ்வநாதன். 1989-ம் ஆண்டு ஐபிஎஸ் ஆக தேர்வானவர். 1990-ம் ஆண்டு தருமபுரியில் ஏஎஸ்பியாக பணியை தொடங்கினார்.

சட்டம் ஒழுங்கு, சிபிஐ, உளவுபிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி 2007-ம் ஆண்டுசிறந்த பணிக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றார். பின்னர்2017 மே மாதம் 13-ம் தேதி சென்னைபெருநகர 104-வது காவல் ஆணையராக பொறுப்பேற்றார். தமிழகத்திலேயே சிறந்த காவல் ஆணையராக தமிழக அரசு விருதும் பெற்றார். தற்போது சென்னை பெருநகர காவல் ஆணையராக பதவி ஏற்று 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளை அடையாளம் காணவும் சென்னை முழுவதும் ‘மூன்றாம் கண்’ என்ற பெயரில் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்ற செயல்களை கணிசமாக குறைய காரமணமாக உள்ளார்.

இந்நிலையில், காவல் ஆணையராக 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்ததையடுத்து அவருக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x