Published : 12 May 2020 07:25 AM
Last Updated : 12 May 2020 07:25 AM

கோவையில் 7,500 பேருக்கு நிவாரணப் பொருட்கள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

கோவையில் நேற்று போலீஸாருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அருகில், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் கே.பெரியய்யா, காவல் ஆணையர் சுமித்சரண். படம்: ஜெ.மனோகரன்

கோவை

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், போலீஸார் உட்பட 7,500 பேருக்கு முழு உடல் பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் நிவாரணப் பொருட்களை, கோவையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

அவர் பேசும்போது, "கரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனை, தமிழகத்தில் தான் அதிகம் நடத்தப்படுகிறது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை தமிழகத்தில் குறைவாக உள்ளது" என்றார்.

மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் கே.பெரியய்யா, காவல் ஆணையர் சுமித்சரண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நடிகர் மோகன்லால் உதவி

மலையாள நடிகர் மோகன்லால் சார்பில், கோவை மாநகராட்சி ஊழியர்களுக்காக ரூ.10 லட்சம் மதிப்பிலான முழு உடல் பாதுகாப்பு கவச உடை, முகக்கவசங்கள் ஆகியவை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டன.

22 பகுதிகளுக்கு தளர்வு

கோவை மாநகரில் கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சீல் வைக்கப்பட்டிருந்த 30 இடங்களில், 22 இடங்களுக்கு தற்போது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x