Published : 11 May 2020 11:18 AM
Last Updated : 11 May 2020 11:18 AM
மதுரையில் கோயில் அர்ச்சகர்களுக்கு நிவாரணப் பொருட்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
மதுரை மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளை வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடர்ந்து ஆய்வு செய்து, ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்குகிறார்.
கிருமிநாசினி தெளித்தல், சமூக விலகல், முகக் கவசம் அணிதல் போன்ற கரோனா தடுப்பு விழிப்புணர்வையும் பொதுமக்களிடம் ஏற்படுத்துகிறார்.
இந்நிலையில் பொது ஊரடங்கையொட்டி நடன கலைஞர்கள், கிராமிய, தவில், நாதஸ்வர கலைஞர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என, பல்வேறு தரப்பினருக்கும் உணவுப்பொருட்கள், முகக்கவசம், சானிடைசர், கபசுர குடிநீர் பொடி உள்ளிட்ட நிவாரணங்களையும் அவர் வழங்குகிறார்.
இதன் தொடர்ச்சியாக மதுரை ஒத்தக்கடை அருகிலுள்ள திருமோகூர் ஸ்ரீ காளமேகப்பெருமாள் கோயில் அர்ச்சகர்களுக்கு உணவுப்பொருட்களை நேற்று அமைச்சர் ஆர்பி. உதயகுமார் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், சீனிவாசன், ரபு, கண்ணப்பன், நெல்லை பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT