Published : 08 Aug 2015 10:46 AM
Last Updated : 08 Aug 2015 10:46 AM
அரசு பேருந்துகளில் நடந்து வரும் தொடர் திருட்டுகளால் பயணிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுடன் போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 806 வழித்தடங்களில் 3,500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் சராசரியாக 51.84 லட்சம் பேர் பயணம் செய் கின்றனர். இதன் மூலம் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு நாள்தோறும் சராசரியாக ரூ.3 கோடி வசூலாகிறது.
சென்னை நகரப் பேருந்து களில் குறிப்பாக 2ஏ, 23சி, 27பி, 5சி, 21ஜி, 18பி, ஏ51, 17டி, 11ஏ, 12பி, 27சி, 28சி, 56 உள்ளிட்ட வழித்தடங்களில் அடிக்கடி, நகை, செல்போன் திருட்டுகள் நடக்கிறது. இதேபோல், வெளியூருக்கு இயக் கப்படும் அரசு பேருந்துகளிலும் திருட்டுகள் அதிகரித்துள்ளன.
இது தொடர்பாக அரசு பேருந்து நடத்துநர்கள் சிலர் கூறும்போது, “பேருந்துகளில் தற்போது திருட் டுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக செல்போன் மற்றும் நகைகள் அதிகமாக திருடப்படுகின்றன. பயணிகள் இதுகுறித்து எங்களிடம் புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக நாங்கள் நிர்வாகத் திடம் புகார் தெரிவித்துள்ளோம்’’ என்றனர்.
இதுபற்றி போக்குவரத்துகழக உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘பேருந்துகளில் நகை, செல்போன் உள்ளிட்ட திருட்டு சம்பவங்கள் நடந்தால், அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பயணிகள் மூலம் புகார் கொடுக்க நடத்துநர்களுக்கு அறிவுறுத்தியுள் ளோம்.
மேலும், இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்த வுள்ளோம். இதையடுத்து, போலீ ஸார் மாற்று உடையில் பேருந்து களில் பயணித்து திருடர்களை கண்டுபிடிப்பது, புகார் அளிப்பதற் கான எண்களை அறிவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக் கப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT