Published : 07 May 2020 06:03 PM
Last Updated : 07 May 2020 06:03 PM
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 59 ஆக அதிகரித்ததற்கு தமிழக மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் என அரசுப் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 58-லிருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு இன்று (மே 7) அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் வே.மணிவாசகம் கூறுகையில், ''அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. ஓராண்டு அதிகரிப்பின் மூலம் அனைத்துத் துறைகளிலும் அலுவலர்கள் 30 ஆண்டுகள் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். இது அவர்களுக்கு முழு ஓய்வூதியம் கிடைப்பதற்கு வழிவகுக்கும். கல்வித் துறையில் ஆசிரியர்களின் பணி அனுபவம் மாணவர்களுக்கு முழுமையாகக் கிடைக்கும். இதனால், மாணவர்கள் மிகவும் பயனடைவார்கள்.
உதாரணமாக, கல்லூரிகளில் ஓய்வு பெறும் வயது 60 ஆகவும், உயர்கல்வி நிறுவனங்களில் ஐஐடியில் பணியாற்றும் பேராசிரியர்கள் 65 முதல் 70 வயது வரையிலும் பணியாற்றும் முறை நடைமுறையில் உள்ளது. எனவே, மாணவ, மாணவியருக்குப் பயனளிக்கும் இந்த அறிவிப்பினை கல்வித்துறை சார்பில் வரவேற்கிறோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT