Published : 07 May 2020 12:02 PM
Last Updated : 07 May 2020 12:02 PM
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் எலைட் டாஸ்மாக் மதுபானக் கடையில் காலையில் இருந்தே கூட்டம் அலைமோதுகிறது. இங்கு வெளிநாட்டு மதுபான வகைகள் அதிகளவில் விற்பனையாகிவருகிறது.
சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் இன்று (மே 7) முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டுள்ளன.
பல்வேறு மாவட்டங்களிலும் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் எலைட் டாஸ்மாக் மதுபானக் கடையில் காலையில் இருந்தே கூட்டம் அலைமோதுகிறது.
நெல்லை,தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டங்களில் மொத்தம் 165 மதுபான கடைகள் உள்ளன .ஒரே எலைட் மதுபான கடை மட்டும் உண்டு.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 96 மதுபான கடைகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக 7 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள 69 மதுபான கடைகளில் 9 கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தென்காசி திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலையிலிருந்தே கூட்டம் குறைவாகவே இருந்து வருகிறது.
ஆதார் அட்டை கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே வயது அடிப்படையில் குறிப்பிட்ட நேரங்களில் மதுபானங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தென்காசி திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆக உள்ள ஒரே ஒரு எலைட் மதுபானக் கடைகளில் மட்டும் கூட்டம் காலையிலிருந்தே அலைமோதிக் கொண்டு இருக்கிறது. சமூக இடைவெளி விட்டு மாஸ்க் அணிந்து இன்னும் சிலர் குடையுடன் வந்து வரிசையில் நின்றனர். இக்கடையில் உயர்ந்த ரக மதுபானங்கள் அதிக அளவில் விற்று வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT