Published : 07 May 2020 11:34 AM
Last Updated : 07 May 2020 11:34 AM
திருத்தணியில் தாய் உயிரிழப்பால் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட இரு பள்ளி மாணவிகளுக்கு உதவிகள் கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி- சுப்புராய மேஸ்திரித் தெருவைச் சேர்ந்தவர் ஜெயகாந்தி. இவரது கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால், உணவு விடுதி ஒன்றில் பணிபுரிந்து வந்த ஜெயகாந்தி, தன் இரு மகள்களையும் அரசுப் பள்ளியில் படிக்க வைத்து வளர்த்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக ஜெயகாந்தி உயிரிழந்தார். அவரது ஈமச் சடங்குகளுக்குக் கூட வழியின்றித் தவித்த மாணவிகள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஈமச்சடங்குகளைச் செய்து முடித்தனர்.
தாய் உயிரிழப்பால், ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட மாணவிகள் இருவரும் நல்லோரின் உதவிக்காகக் காத்து நிற்கின்றனர். அவர்களுக்கு உதவ கீழ்க்கண்ட அக்கவுண்ட் எண்ணுக்கு தங்களின் உதவிகளை அனுப்பலாம்.
இதற்கிடையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, மாணவிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர், தாய் உயிரிழந்த துயரத்தால் தளர்ந்து போகாமல், நன்றாகக் கல்வி கற்க வேண்டுமெனவும், தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT