Published : 06 May 2020 08:54 PM
Last Updated : 06 May 2020 08:54 PM

தமிழகத்தில் இன்று 771 பேருக்கு கரோனா; சென்னையில் 324 பேருக்கு தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 4829ஆனது

தமிழகத்தில் 771பேருக்கு இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், சென்னையில் 324 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தொற்று அனைத்தும் கோயம்பேடு சந்தை தொடர்புடையவை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 771பேருக்கு இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 4829 ஆக அதிகரித்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் 50 சதவீதத்துக்கும் மேல் அதாவது 324 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 2004 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 2328 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தொடர்ச்சியாக மருத்துவ சோதனையில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஊரடங்கு காலத்தில் வீட்டில் தனிமையில் இருப்பது குறித்து அரசு வலியுறுத்தி வந்தபோதும் பலரும் அதைக் கடைப்பிடிப்பதில்லை. தனி மனித இடைவெளி, முகக்கவசம் அணியாமல் இருப்பது என இருப்பதால் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.

மே 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில் தமிழக அமைச்சரவை கூடி தமிழகத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை குறித்து விரிவான அறிவிப்பை வெளியிட்டது. அதில் சென்னைக்கு மட்டும் தனியாக அறிவிப்பை வெளியிட்டது.

ஊரடங்கைப் படிப்படியாகத் தளர்த்த முடியும் எனத் தெரிவித்துள்ள அரசு ஊரடங்கைத் தளர்த்தியுள்ளது. இதனால் இன்று போக்குவரத்து வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்றும் கரோனா அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை ஒவ்வொரு நாள் எண்ணிக்கையை முறியடித்து வருகிறது. சென்னையும் தமிழ் நாட்டில் தொடர்ந்து அதிக அளவு எண்ணிக்கையுடன் முதலிடத்தில் உள்ளது.


மஹாராஷ்டிரா 15525, குஜராத் 6245, டெல்லி 5104, அடுத்து டெல்லியை முந்தும் வகையில் வேகமாக சென்னை செல்கிறது. தமிழகத்தில் ஒரே நாளில் 771 பேருக்கு தொற்று அதிகரித்து 4829 எண்ணிக்கையுடன் டெல்லியை நெருங்கி வருகிறது. கரோனா உறுதிப்படுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது.


இன்று கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 771 ஆகும். அதைச் சேர்த்து 4829 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 324 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மீதியுள்ள 23 மாவட்டங்களில் 447 பேருக்கு தொற்று உள்ளது. 13 மாவட்டங்களில் தொற்று இன்று இல்லை.இதில் சென்னைக்கு இணையாக அரியலூர் பெரிய அளவில் உள்ளது.

* தற்போது 36 அரசு ஆய்வகங்கள், 16 தனியார் ஆய்வகங்கள் என 52 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக, சிகிச்சையில் உள்ளவர்கள் 3,275 பேர்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,88,241.

* மாதிரி எடுக்கப்பட்ட தனி நபர்களின் எண்ணிக்கை 1,78,472.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 13,413.

* மொத்தம் தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 4829.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 771.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 575 பேர். பெண்கள் 196 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 31 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,516 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 2 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 35 ஆக உள்ளது.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 324 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் 2004ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 2328 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் பெருநகரங்களில் சென்னை, இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் எண்ணிக்கைக்கு இணையாகச் செல்கிறது.

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக இருந்த கோவை நேற்று அரியலூர், கடலூரில் அதிகரித்த நோய் எண்ணிக்கை அடிப்படையில் கோவை 4 வது இடத்துக்கு தள்ளப்பட்டது. சென்னைக்கு அடுத்தப்படியாக கடலூர் ஒரே நாளில் 95 எண்ணிக்கை அதிகரித்து 326 ஆக உள்ளது.

மூன்றாவது இடத்தில் அரியலூர் ஒரே நாளில் 188 அதிகரித்து 222 ஆக உள்ளது. கோவை பாதிப்பு எதுவும் இன்றி 4 வது இடத்தில் 146 என்கிற எண்ணிகையுடனும், 5 வது இடத்தில் செங்கல்பட்டு 9 அதிகரித்து 145 என்கிற எண்ணிக்கையிலும் உள்ளது. திண்டுக்கல்லில் 9அதிகரித்து 107 ஆக அதிகரித்துள்ளது., ஈரோடு 70 என்கிற அதே எண்ணிக்கையுடன் உள்ளது. திருவள்ளூர் 34 அதிகரித்து 129 ஆக உள்ளது.

விழுப்புரம் 5 அதிகரித்து 164 ஆக உள்ளது, திருவண்ணாமலையில் 17 அதிகரித்து 42 ஆக உள்ளது. மதுரையில் 20 அதிகரித்து 111 ஆக உள்ளது. தென்காசியில் 1 அதிகரித்து 51 ஆக உள்ளது. கரூர் 1 அதிகரித்து 45 ஆக உள்ளது.

பெரம்பலூர் தொற்று எண்ணிக்கை 3 அதிகரித்து 40 ஆக உள்ளது. திருப்பத்தூரில் 1 அதிகரித்து 20 ஆக உள்ளது. திருவாரூரில் தொற்று எண்ணிக்கை 1 அதிகரித்து 32 ஆக உள்ளது. திருச்சியில் 1 அதிகரித்து 57 ஆக உள்ளது. விருதுநகரில் 35 ஆக உள்ளது. வேலூர் 6 அதிகரித்து 22 ஆக உள்ளது. நெல்லை 1 அதிகரித்து 65 ஆக உள்ளது.

தூத்துக்குடி 2 அதிகரித்து 29 ஆக உள்ளது. திருவண்ணாமலை 17 அதிகரித்து 42 ஆக உள்ளது. தேனி 2 அதிகரித்து 51 ஆக உள்ளது. தஞ்சாவூர் 1 அதிகரித்து 63 ஆக உள்ளது. சேலம் 1 அதிகரித்து 35 ஆக உள்ளது. புதுக்கோட்டை 2 அதிகரித்து 3 ஆக உள்ளது, கிருஷ்ணகிரி 2 அதிகரித்து 4 ஆக உள்ளது. மொத்தம் காஞ்சிபுரம் 45 அதிகரித்து 87 ஆக உள்ளது. 24 மாவட்டங்களில் மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் தொற்று இல்லை.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 254 பேர். இதில் ஆண் குழந்தைகள் 130 பேர். பெண் குழந்தைகள் 124 பேர்.

13 முதல் 60 வயது உள்ளவர்கள் 4208 பேர். இதில் ஆண்கள் 2951 பேர். பெண்கள் 1255 பேர். 2 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

60 வயதுக்கு மேற்பட்டோர் 367 பேர். இதில் ஆண்கள் 239 பேர். பெண்கள் 128 பேர்.

15 க்கும் மேற்பட்டோருக்கு தொற்றுள்ள, நான்கு நாட்களில் எண்ணிக்கை இரட்டிப்பாகும், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 32.

15 நபர்களுக்குக் கீழ் தொற்று எண்ணிக்கை கொண்ட ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 5.

கடந்த 28 நாட்களாக ஒரு தொற்றும் இல்லாத பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் நேற்று 2 பேர் தொற்று ஏற்பட்டதால் பச்சை மண்டலத்தை இழந்தது. இன்று மேலும் 2 பேருக்கு அம்மாவட்டத்தில் தொற்று ஏற்பட்டுள்ளது..

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x