Published : 06 May 2020 05:32 PM
Last Updated : 06 May 2020 05:32 PM
அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், நடிகர்கள், டாஸ்மாக் ஊழியர்கள் உட்பட பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையிலும் நாளை (மே 7) திறக்கும் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் ‘குடி’மகன்களின் நெரிசலைச் சமாளிக்க காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட போலீஸார் தயாராகி வருகின்றனர்.
இந்த 3 மாவட்டங்களில் உள்ள மொத்த 500 டாஸ்மாக் கடைகளில் 100 கடைகள் மட்டுமே நாளை திறக்கப்படுகிறது. மார்ச் 24-ல் மூடிய டாஸ்மாக் கடைகள் நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப்படுவதால் நிறைய கூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்கும். பார்களுக்கு அனுமதி இல்லை.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 350 கடைகள் உண்டு, இதில் பெரும்பாலும் நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருப்பதால் 50 கடைகள் மட்டுமே திறக்கப்படுகிறது. செங்கல்பட்டில் மொத்தம் உள்ள 86 கடைகளில் 40 மட்டுமே திறக்கப்படுகிறது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 49 கடைகளில் 16 மட்டுமே திறக்கப்படவுள்ளது.
“நாங்கள் பெரிய அளவில் நெரிசலை எதிர்பார்க்கிறோம். நூற்றுக்கணக்கான போலீஸார் ஊர்க்காவல் படையினர் பந்தோபஸ்துக்காக நியமிக்கப்படுகிறார்கள். மரத்தாலான தடுப்புகள் போடப்பட்டு வரிசை முறை கடைப்பிடிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. மைக் மூலம் போலீசார் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுவார்கள்” என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடைகளுக்கு சில 100 மீ தொலைவிலேயே வாடிக்கையாளர்கள் நிறுத்தப்பட்டு ஆதார் அட்டைகளைக் காட்டச்சொல்லிஅவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதையும் நோய்க்கட்டுப்பாட்டு பகுதியைச் சார்ந்தவர்கள் இல்லை என்பதையும் உறுதி செய்த பிறகே கடைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் சிஸ்டம் கொண்டு வரப்படுகிறது. 60 பேர்களாக அனுப்பப்படுவார்கள். மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 55 வயதுக்கு மேலானவர்கள் மது வாங்க அனுமதிக்க வேண்டாம் என்றும் பரிந்துரைகள் உள்ளன, நாங்கள் இவற்றையெல்லாம் பரிசீலித்து வருகிறோம், என்றார் மூத்த அதிகாரி ஒருவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT