சித்தூர் மாவட்டத்துக்குள் நுழைவதை தடுக்க சாலையின் குறுக்கே பெரிய பள்ளம்: தமிழ்நாடு அதிகாரிகள் நடவடிக்கை 

சித்தூர் மாவட்டத்துக்குள் நுழைவதை தடுக்க சாலையின் குறுக்கே பெரிய பள்ளம்: தமிழ்நாடு அதிகாரிகள் நடவடிக்கை 
Updated on
1 min read

மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப்பகுதிகளில் கடும் கண்காணிப்புகள் இருந்து வரும் நிலையில் தமிழ்நாடு சித்தூர் எல்லையில் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் மற்றும் வருவாய் அதிகாரிகள் எல்லை தாண்டிய மக்கள் போக்குவரத்தை தடுக்க சாலையின் குறுக்கே மிகப்பெரிய பள்ளம் தோண்டியுள்ளனர்.

இதனையடுத்து எல்லை மாவட்டமான ஹனுமந்தபுரத்தில் பதற்றம் நிலவியது. எல்லையைத் தாண்டியுள்ள சத்யவேடு மணடலத்தில் திறந்த மதுபானக்கடைகளுக்காக தமிழ்நாட்டிலிருந்து நிறைய குடிமகன்கள் எல்லை தாண்டியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து சித்தூர் மாவட்ட அதிகாரிகள் சுமார் 14 ஒயின்ஷாப்களை மூடிவிட்டனர்.

பள்ளம் தோண்டியதையடுத்து ஹனுமந்தபுரம் மக்களுக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் பிச்சாத்தூர் பகுதியிலிருந்து வந்த அதிகாரிகள் மக்களை சமாதானப்படுத்தினர். அதாவது சென்னையில் கரோனா தொற்று அதிகமாக இருப்பதால் உங்கள் நன்மைக்காகத்தான் இந்த ஏற்பாடு என்று கூறியதையடுத்து மக்கள் திருப்தியடைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in