Published : 06 May 2020 08:48 AM
Last Updated : 06 May 2020 08:48 AM
தமிழக கிராம ஊராட்சிகளுக்கு இணைய இணைப்பு வழங்கும் பாரத்நெட் திட்டத்துக்கான ஒப் பந்தப்புள்ளிக்கு (டெண்டர்) மத்திய அரசு தடை விதித்து ள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்து அமைச்சர் ஆர்.பி.உத யகுமார் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள ஊராட் சிகளை கண்ணாடி இழை மூலம் இணைக்கும் ‘பாரத் நெட்’ திட்டத்துக்காக தமிழ்நாடு கண் ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (டான் பிநெட்) கடந் தாண்டு டிச.5-ல் ஒப்பந்தப்புள்ளி கோரியது.
இதற்கிடையே, மத்திய அர சின் தொலைத் தொடர்புத் துறை இத்திட்டத்தை 2021 மார்ச் 31-க்குள் தமிழகத்தில் முழுமையாக நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயித்தது. ஒப் பந்தப்புள்ளிகளை இறுதி செய்து ஒப்பந்ததாரர்களை தேர்வு செய் யும் பணி நடைபெற்ற நிலையில், கரோனா தொற்றால் ஊரடங்கு அமலானது.
பேரிடர் காலங்களில் சிறப் பான தகவல் தொடர்பை மேற் கொள்ள பாரத்நெட் திட்டத்தை 9 மாதங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். இதனால், தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந் தப்புள்ளிகள் சட்டப்படியும், உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் அடிப்படையிலும் கடந்தாண்டு கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியின் வரையறைகளை திருத்தி, இத்திட்டங்களில் முன் அனுபவம், பொருளாதாரத்திறன் மிக்க ஒப் பந்ததாரர்களைத் தேர்வு செய்ய திருத்திய ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டது. இதில் எந்த வரையறை மீறலும் இல்லை.
ஆனால், ஒப்பந்தப்புள்ளி குறித்த தவறான புரிதலுடன் சில அமைப்புகள் அளித்த புகாரில், தமிழக அரசின் தலைமைச் செய லர் மற்றும் டான்பிநெட் நிர்வாக இயக்குநர் ஆகியோரிடம் மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை அறிக்கை கோரியுள்ளது.
உள்ளூர் தயாரிப்பாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் 50 சதவீதத்துக்கு மேல் பங்கேற்க வேண்டும் என்ற `மேக் இன் இந்தி யா’வின் வரன்முறையை மீறியதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருத்தப்பட்ட ஒப்பந்தப்புள்ளி வரையறையில், உள்ளூர் போட்டி யாளர்கள் 50 சதவீதத்துக்கும் மேல் பங்கேற்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்ப உள்ளது.
ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட ஆரம்பக் கட்டத்திலேயே அரசியல் உள்நோக்கத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இட்டுக் கட்டி கூறியுள்ளார். புகார் மீது மத்திய அரசு அறிக்கை கோரிய நிலையில், பாரத்நெட் ஒப்பந்தத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக உண்மையைத் திரித்து அரசியல் செய்வது வியப் பாக உள்ளது.
மத்திய அரசு பாரத்நெட் திட்ட ஒப்பந்தப்புள்ளிகளுக்கு தடை விதிக்கவில்லை. மக்கள் நலனுக்காக இத்திட்டத்தை வெற்றிகரமாக அதிமுக அரசு நிறைவேற்றும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment