Published : 03 May 2020 02:45 PM
Last Updated : 03 May 2020 02:45 PM
கடலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சார்பில் சிதம்பரம் நகராட்சி பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டது.`
கரோனா வைரஸ் நோய் பரவலை தடுப்பதற்காக மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் தமிழகஅரசு ஆகியவை ஆரோக்கியம் திட்டத்தின் கீழ் மனிதநோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும் ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக்கம் ஆல்பம்-30 என்ற மாத்திரைகள் கடலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சார்பாக இன்று(3ம் தேதி)சிதம்பரம் நகராட்சி ஊழியர்கள்,
அலுவலர்கள்,தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மருந்தாளுனர் சங்க செயலாளர் வெங்கடசுந்தரம் தலைமையில் மருந்தாளுநர் நிர்வாகிகள் சார்பில் நகராட்சி
ஆணையர் சுரேந்தர்ஷாவிடம் ஹோமியோபதி மருத்துவர் பரணிதரன் 52 மாத்திரைகள் அடங்கிய 500 பாட்டில்களை வழங்கினார்.
நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும் ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக்கம் ஆல்பம்-30 என்ற மாத்திரைகளை 10 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள் காலை வெறும் வயிற்றில் 6 மாத்திரைகளையும், 10 வயதுக்குள்ளான சிறுவர்கள் காலை வெறும் வயிற்றில் 4 மாத்திரைகள் வீதம் சுவைத்து சாப்பிட வேண்டும் என்று ஹோமியோபதி மருத்துவர் தெரிவித்தார். நகராட்சி சுகாதாரதுறை ஆய்வாளர் பால்டேவிட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT