Published : 03 May 2020 12:30 PM
Last Updated : 03 May 2020 12:30 PM
போடியில் இட்லி விற்கும் பெண்ணிற்கு கரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு நேற்று தேனி மாவட்டத்தில் புதிய தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் 43 பேர் வரை கரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். போடியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்ற அனைவரும் நேற்று முன்தினம் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் கரோனா இல்லாத மாவட்டமாக தேனி மாறியது.
மேலும் கடந்த மாதம் 17-ம் தேதி முதல் எவ்வித புதிய தொற்றும் இல்லாததால் தேனி மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாறியது.
இந்நிலையில் நேற்று போடியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர் போடி அரசு மருத்துவமனை அருகில் இட்லி கடை வைத்துள்ளார்.
பாதிப்புடைய அனைவரும் குணமடைந்த நிலையில் 14 நாட்களுககுப் பிறகு தேனி மாவட்டத்தில் புதிய தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து இப்பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கும் ரத்தமாதிரி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கடையில் நகராட்சி, மருத்துவமனை ஊழியர்கள் பலரும் சாப்பிட்டு உள்ளனர்.
எனவே அவர்களையும் கண்டறிந்து ரத்த மாதிரி எடுக்கும் பணியில் மருத்துவத்துறை ஈடுபட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT