Published : 02 May 2020 07:53 AM
Last Updated : 02 May 2020 07:53 AM
சென்னையில் கரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில், அங்கிருந்து லாரிகளில் திருச்சிக்கு வருவோரைக் கண்காணிக்க மாவட்ட எல்லையில் உயர் கோபுரம் அமைத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்.30-ம் தேதி நிலவரப்படி கரோனா தொற் றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,323. இதில் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட் டோர் 906 பேர். அதே வேளையில், மாநிலத்தின் பிற பகுதி களில் ஓரிரு மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் மிகக் குறைவான பாதிப்பு உள்ளது. பல மாவட்டங்கள் தொற்றில்லா மாவட்டங்களாக உள்ளன.
திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 51 பேரில் நேற்று வரை 47 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு சென்றுவிட்டனர். தற்போது 4 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். ஏப்.22-ம் தேதிக்குப் பிறகு கடந்த 9 நாட்களாக திருச்சி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை.
எனவே, திருச்சி மாவட்டத்தில் கரோனா இல்லாத நிலையை எட்டவும், சென்னையில் கரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில், அங்கிருந்து வரும் லாரிகளில் திருச்சி திரும்புவோர் மூலம் கரோனா தொற்று பர வாமல் தடுக்கவும் மாவட்ட எல்லைகளில் போலீஸார் மூலம் தீவிர சோதனையை மாவட்ட நிர் வாகம் மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:
திருச்சி மாவட்டத்தில் இதுவரை 2,945 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட் டுள்ளது. இவர்களில், 51 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களின் வசிப்பிடங்கள் அமைந்துள்ள 27 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, மக்கள் வெளி யேறாமல் தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு வருகிறது. 27 இடங்களில் பெரும்பாலானவை தனிமைப்படுத்தப்பட வேண்டிய காலத்தைக் கடந்துள்ளன.
எனவே, மாநகரைப் பொறுத்த வரை மே 2-ம் தேதி வரையும், புறநகர்ப் பகுதியைப் பொறுத்த வரை மே 7-ம் தேதி வரையும் புதிதாக யாரும் கரோனா தொற் றால் பாதிக்கப்படாவிட்டால் திருச்சி மாவட்டம் ஆரஞ்சு மண் டலத்துக்கு மாறும்.
இதனிடையே, திருச்சி மாவட் டத்தில் கரோனா இல்லாத நிலையை அடையவும், சென் னையில் கரோனா தொற்று தீவிர மாக பரவிவரும் நிலையில், அங்கிருந்து லாரிகளில் திருச்சி திரும்புவோர் மூலம் கரோனா தொற்று பரவாமல் தடுக்கவும் மாவட்ட எல்லைகளில் 11 இடங் களில் உயர் கோபுரம் அமைத்து போலீஸார் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
லாரிகளில் வருவோர் வேறு மாவட்டத்தினராக இருந்தால் அதே லாரியில் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். திருச்சி மாவட்டத்தினராக இருந்தால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், 14 நாட்கள் அவரவர் வீடுகளில் தனி மைப்படுத்தப்படுவர்.
கரோனா தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்படுவர். அதன்படி, நேற்று முன்தினம் லாரிகள் மூலம் சென்னையில் இருந்து திரும்பிய திருச்சியைச் சேர்ந்த 7 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள னர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT