Published : 01 May 2020 11:33 AM
Last Updated : 01 May 2020 11:33 AM
கர்ப்பிணி பெண்ணுக்கு ‘கரோனா’ உறுதி செய்யப்பட்டதால் அவர் மகப்பேறு சிகிச்சைக்காக வந்த அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் மூடப்பட்டது.
மதுரை அருகே சமயநல்லூரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
இந்த சுகாதார நிலையத்தில் கடந்த சிலநாளுக்கு முன் கர்ப்பிணி பெண் ஒருவர் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் இருந்தது. சந்தேகமடைந்த மருத்துவர்கள், அவரை மேல் சிகிச்சைக்காகவும், கரோனா பரிசோதனை செய்து கொள்வதற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு நடந்த பரிசாதனையில் அவருக்கு ‘கரோனா’நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அ
திர்ச்சியடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், சமயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கான சிகிச்சைகளை நிறுத்தினர். மருத்துவமனைக்குள் யாரும் நுழையாதவாறு கயிறு கட்டப்பட்டுள்ளது
தூய்மைப் பணியாளர்கள், மருத்துவமனை வளாகத்திலும், உள்பகுதியிலும் ‘கிருமிநாசினி’ தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதனால்,அப்பகுதியில் நேற்று பரபரப்பு காணப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT