Published : 01 May 2020 08:28 AM
Last Updated : 01 May 2020 08:28 AM
தமிழகத்தில் மார்ச் 22-ம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து நேரடியாக வந்தோருக்கும், டெல்லி நிகழ்வுக்குச் சென்று வந்தோருக்கும் மட்டுமே பரிசோதனை மூலம் கரோனா உறுதி செய்யப்பட்டது.
முதல் முறையாக தமிழகத்தில் உள் ளூரைச் சேர்ந்த ஒரு நபராக மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த கட்டுமான ஒப்பந்ததாரருக்கு கரோனா தொற்று உறுதியானது. இவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உட்பட மதுரையில் அடுத்தடுத்து பலருக்கு கரோனோ உறுதி செய்யப்பட்டது.
அதன்பிறகு கடந்த சில வாரங் களாக மதுரையில் கரோனா கட் டுக்குள் இருந்தது. சென்னை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருநெல்வேலி, திருச்சி என முக்கிய மாநகராட்சிகளில் கரோனா தொற்று வேகமாகப் பரவத் தொடங்கியது. ஆனால், மதுரையில் இடையில் பல நாட்கள் கரோனா தொற்றே கண்டறி யப்படவில்லை.
ஏப்.22-க்குப் பிறகு மதுரையில் கரோனா வேகம் காட்டத் தொடங் கியது. மாவட்டத்தில் தற்போது வரை 79 பேருக்கு தொற்று உறுதி யாகியுள்ளது. இதில், மாநகராட்சிப் பகுதியில் மட்டும் ஏப்.28 வரை 46 பேருக்கு தொற்று உறுதி செய் யப்பட்டது. இதில், ஒரு தீயணைப்பு வீரர், 2 போலீஸார், அர்ச்சகரின் தாய், செல்லூரைச் சேர்ந்த 4 குழந்தைகள், அவரது தாய் உள்ளிட்ட 6 பேருக்கு யாரிடம் இருந்து தொற்று பரவியது என்பதை தற்போது வரை உறுதி செய்ய முடியவில்லை. அதனால், மதுரையில் கரோனா சமூக பரவல் நிலையை அடைந்துவிட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
21 குடியிருப்புகளுக்கு ‘சீல்’
மதுரை நகரில் சுமார் 1 லட்சம் பேர் வசிக்கக்கூடிய 21 குடியிருப்புப் பகுதிகளில் கரோனா பரவியுள்ளது. இதையடுத்து ‘சீல்’ வைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏப்.28-ம் தேதி வரை ஆனையூர்- 5, செல்லூர் 8, அண்ணா நகர் 8, பழங்காநத்தம் 1, கோமதிபுரம் 1, சிக்கந்தர் சாவடி 1, குப்புபிள்ளை தோப்பு 1, மகபூப்பாளையம் 2, மதிச்சியம் 1, மேலமடை 1, நாராயணபுரம் 1, நரிமேடு 1, பெரியார் பஸ்நிலையப் பகுதி 2, ரேஸ்கோர்ஸ் காலனி 1, எஸ்.ஆலங்குளம் 1, தெற்குப்பெருமாள் மேஸ்திரி வீதி 1, வண்டியூர் 4, மேல மாசி வீதி 3, கூடல்நகர் 1, கரி சல்குளம் 1, அனுப்பானடி 1 என மொத்தம் 46 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் இது வரை 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் சிகிச்சை பலனளின்றி இறந்துள்ளனர்.
செல்லூரில் அதிக பாதிப்பு
அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வசிக்கும் மண்டலம் 2-ல் உள்ள செல்லூரில்தான் மிக அதிகமாக 8 பேருக்கு பாதிப்பு தெரிய வந் துள்ளது. இப்பகுதியில் மிக நெருக் கமாக மக்கள் வசிக்கின்றனர். அத னால், பலருக்கும் பரவியிருக்கக் கூடும் என்பதால் அப்பகுதியில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு வீடு வீடாகப் பரிசோதனை மேற் கொண்டு வருகின்றனர். ஆனால், பரிசோதனை செய்யச் சென்ற சுகா தாரத் துறை ஊழியர்களையே அப்பகுதி இளைஞர்கள் சிலர் விரட் டியடித்துள்ளனர். இதையறிந்த மாந கராட்சி ஆணையர் விசாகன், நேரில் சென்று அவர்களை சமாதானம் செய்து அவரே முன்னின்று வீடு, வீடாக பரிசோதனை நடத்தினார்.
குடிநீர் பற்றாக்குறை
தடைசெய்யப்பட்ட பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் விநியோகிப்பதாகக் கூறப்படுகிறது. குடிநீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க மக்கள் தனியார் லாரி, டிராக்டர்களை வரச்சொன்னால் அதை போலீஸார் அனுமதிப்பதில்லை.
மக்களைச் சுத்தமாக, சுகா தாரமாக இருக்க அறிவுறுத்தும் மாநகராட்சி, சரியாக குடிநீர் விநி யோகம் செய்யாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
மாநகராட்சி ஆணையர் விசாகன் கூறுகையில், தடை செய்யப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு காய்கறி, பால், மருந் துகள், மளிகைப் பொருட்களை நடமாடும் கடைகள் வாயிலாக வீடு களுக்கே சென்று வழங்க மாந கராட்சி ஏற்பாடு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடி யிருப்புப் பகுதியிலும் உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
‘ட்ரோன்’ மூலம் கண்காணிப்பு
மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருகிறார்களா? என்பதை போலீஸார் உதவியுடன் ‘ட்ரோன்’ கேமரா மூலம் கண்காணிக்க ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வீடு, வீடாக கபசுரக் குடிநீர் விநியோகம் செய்கிறோம். தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மாநக ராட்சி கால் சென்டரில் வரும் புகார்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படுகிறது. அம்மா உண வகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT