Published : 01 May 2020 08:17 AM
Last Updated : 01 May 2020 08:17 AM

போதை இல்லா தமிழ்நாடு வேண்டும்: சமூக வலைதளங்களில் வைரலாகும் பட்டுக்கோட்டை பிரபாகரின் பதிவு

பட்டுக்கோட்டை பிரபாகர்

திருச்சி

டாஸ்மாக் மதுபானக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ‘போதை இல்லா தமிழ்நாடு- மூடியது மூடியதாகவே இருக் கட்டும்- வேண்டாம் மதுக்கடை’ என்ற லோகோ சமூக வலை தளங் களில் வைரலாகி வருகிறது.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 37 நாட்களுக்கு மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் கார ணமாக டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

மதுவின் மோகத்தில் மதுப்பிரி யர்கள் பலர் மூடப் பட்டிருந்த கடைகளை கொள்ளையடித்த சம்பவமும், சிலர் மதுவுக்கு பதிலாக வேதிப்பொருட்களை உட்கொண்டு உயிரிழந்த சம்ப வமும் நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில், கடந்த 37 நாட்களாக மூடப்பட்டுள்ள டாஸ் மாக் மதுபானக் கடைகளை, ஊரடங்கு முடிந்த பின்னர் மீண்டும் திறக்கக்கூடாது என சில அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வரு கின்றனர்.

இதுதொடர்பாக எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது முகநூல் பக்கத்தில் போதை இல்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் 14 பதிவுகளை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ‘போதை இல்லா தமிழ்நாடு- மூடியது மூடிய தாகவே இருக்கட்டும்- வேண்டாம் மதுக்கடை’ என்ற லோகோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரு கிறது.

இதுகுறித்து பட்டுக்கோட்டை பிரபாகர், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

மதுவுக்கு எதிராக 30 ஆண்டு களுக்கு மேலாக பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின் றனர். மது, குடிப்பவரை மட்டுமல் லாமல் அவரது குடும்பத்தைச் சீரழிக்கிறது. சாலை விபத்துக ளுக்கு காரணமாகிறது. பாலியல் துன்புறுத்தல்களுக்கு, கொலை, கொள்ளைகளுக்கு வித்திடுகிறது.

மதுப்பழக்கத்தை நிறுத்த இதுவே சரியான சந்தர்ப்பம். மளிகை, காய்கறி கடைகளை திறக்க வேண்டும் என மக்கள் போராடுகின்றனர். மதுபானக் கடையை திறக்க வேண்டும் என யாரும் போராடவில்லை.

மதுவை நிறுத்திவிட்டால், மனநோயாளியாகி விடுவார்கள் என்பதெல்லாம் தற்போது பொய் யாகி வருகிறது. மது குடித்து இறப்பவர்களை விட இது குறைவு தான்.

மதுக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம், மதுக்கடத்தல் அதிகமாகும் என்றால் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து தடுத்தால் போதும். மக்களுக்கு பாதிப்பு என்பதால் தான் சூதாட்டம், லாட்டரி, குட்கா ஆகியவற்றுக்கு தடை விதித் துள்ளோம். மதுவுக்கு தடை விதித் தால் என்ன?.

மதுக்கடைகளை மூடினால் வருமான இழப்பை ஈடுகட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் போன்றோர் பல்வேறு மாற்று யோசனைகளைத் தெரிவித்துள்ளனர். வல்லுநர்கள் குழுவை அமைத்து இதை ஈடுகட்டுவது குறித்தும், இதில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவது குறித்தும் திட்டமிடலாம். மதுக்கடைகள் வேண்டாம் என்பவர்கள் வாக்களிக் குமாறு முகநூல் பக்கத்தில் சிறிய சர்வே நடத்தினேன். 98 சதவீதம் பேர் வேண்டாம் என்றுதான் தெரிவித்துள்ளனர்.

கடந்த 37 நாட்களாக மதுவை தீண்டாதவர்களை மீண்டும் கடைகளை திறந்து குடிகாரர் களாக மாற்றி விட வேண்டாம் என்பதுதான் எனது வேண்டுகோள், இதுகுறித்து தமிழக அரசு உரிய, நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புவோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x